Breaking News

மைத்திரியிடம் கெஞ்சிய மொஹான் பீரிஸ்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், தன்னைத் தொடர்ந்தும் பிரதம நீதியரசராகச் செயற்பட அனுமதிக்குமாறு மொஹான் பீரிஸ் கெஞ்சியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பில் நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் ராஜித சேனாரத்ன இதுபற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்று முன்தினம் காலையில் மொஹான் பீரிஸ் தன்னிடம் தொலைபேசியில் பேசியதாக, அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தகவல் வெளியிட்டார்.

தன்னை தொடர்ந்தும் பிரதம நீதியரசராக இருக்க அனுமதிக்கும்படியும், அவ்வாறு செய்தால், உங்களுக்குத் தேவையான வகையில் தீர்ப்புகளை அளிப்பேன் என்றும் மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார்.ஆனால் அதற்கு ஜனாதிபதி அதற்கு மறுத்து விட்டதாகவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசாங்கம் ஜனநாயகம், நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்துவதாக வாக்குறுதி கொடுத்தே பதவிக்கு வந்துள்ளது.மொஹான் பீரிசின் இதுபோன்ற செயற்பாடுகளுக்கு அரசாங்கம் இடமளியாது என்று ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.