Breaking News

வலி.வடக்கில் விரைவில் மீள்குடியேற்றம்

அதாவது கடந்த 2012 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் அரசாங்க அதிபராக இருந்த திருமதி இமெல்டா சுகுமார் வலி.வடக்கு இராணுவ உயர் பாதுகாப்பு வலையமாக உள்ள பகுதிகளில் 8 கிராம சேவகர் பிரிவுகளை விடுவிப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளது என்று மாவட்டச் செயலகத்தினால் எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்திற்கு சிபார்சு ஒன்று அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் தற்போது அமைந்திருக்கும் மைத்திரியின் புதிய அரசாங்கம் இதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.உயர்பாதுகாப்பு வலையமாக கையகப்படுத்தி வைத்திருக்கும் பொது மக்களுடைய காணிகளில் ஒரு தொகுதியினை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையினை மேற்கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தலமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு ஆராய்ந்து வலி.வடக்கில் மீள்குடியேற்றம் மிக விரைவில் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி சிபாரிசின் அடிப்படையில் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 8 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்படவுள்ளன.அனுப்பிவைக்கப்பட் சிபார்சின் அடிப்படையில் கையகப்படுத்தி வைக்கப்பட்டுள்ள 6 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள 15 கிராம சேவையாளர் பிரிவுகளின் சுமார் 25 ஆயிரம் மக்களை உள்ளடக்கிய 8 கிராம சேவகர் பிரிவுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.