Breaking News

எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விக்கு பிரதமர் நாளை பதிலளிப்பார்

பிரதம நீதியரசரை பதவியில் இருந்து நீக்கியமை தொடர்பில் கலந்துரையாட கட்சி தலைவர்கள் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்யுமாறு முன்னாள் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கேட்டுக்கொண்டுள்ளார்.

புதிய அரசின் இடைக்கால வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் பாராளுமன்றத்தில் இன்று ஆற்றிய உரையிலேயே அவர் இவ்வாறு கோரியுள்ளார்.

பிரதம நீதியரசரை நீக்குவதற்கு ஒரு முறையிருக்கின்றது பாராளுமன்றத்திற்கே அதற்கான அதிகாரம் உள்ளதாகவும் இது அரசியலமைப்பை மீறும் செயலாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அதிகாரத்தின் பிரகாரமே ஷிராணி பண்டார பதவி நீக்கம் செய்யப்பட்டதாகவும் தினேஸ் குணவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா உரையாற்றுகையில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸின் வீட்டிற்குள் சென்ற சிலர் அவரை அச்சுறுத்திய விடயம் தொடர்பில் பதிலளிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியுள்ளார்.

இதற்கு பதிலளித்த பிரதமர், அமைச்சர் தினேஷ் குணவர்த்தன மற்றும் நிமல் சிறிபாலடி சில்வா ஆகியோரின் கேள்விகளுக்கு நாளை முழுமையான பதிலை வழங்குவதாக தெரிவித்தார்.