Breaking News

வழங்­கப்­பட்­டுள்ள அற்ப அதி­கா­ரத்தை மகா­வலி அதி­கா­ர­சபை அத்துமீறு­கி­றது - விக்கி­னேஸ்­வரன்

தொடர்ச்­சி­யான இரா­ணுவ பிர­சன்னம் தமிழ் மக்­க­ளுக்கு மிக மோச­மான ஒரு பின்­ன­டைவை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­து. அதே­போல வடக்­குக்கு நீர் வழங்­குதல் என்ற போர்­வையில் வெளி இடங்­களில் இருந்து சிங்­கள மக்­களை கொண்­டு­வந்து குடியேற்­று­வதும் தீவி­ர­மான ஒரு பிரச்சினையாக மாறி­யுள்­ள­து. 

இது குடிப்­ப­ரம்­பலை பெரிதும் பாதிக்­கிறது என்று வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் குற்றம் சாட்­டி­யுள்ளார். இலங்­கையின் வடக்கு, கிழக்கில் போருக்குப் பின்னர் தமிழ் மக்­களின் மனித உரி­மைகள் தொடர்பில் கலி­போர்­னி­யாவின் ஓக்லான் ஆய்வு நிறு­வகம் இலங்­கைக்கு வியஜம் செய்து நடத்­திய ஆய்வின் அறிக்கை ( யுத்­தத்தின் நீண்ட நிழல் ) நேற்று முன்­தினம் கலி­போர்­னி­யாவில் வெளி­யிட்டு வைக்­கப்­பட்­டது.

இந்த வெளி­யீட்டு நிகழ்வை ஒட்டி தொலை­பேசி ஊடாக நடை­பெற்ற சர்­வ­தேச செய்­தி­யாளர் மகா நாட்டில் விக்­னேஸ்­வரன் யாழ்ப்­பா­ணத்தில் இருந்து தொலை­பேசி மூலம் கலந்து கொண்டு அறி­முக உரை ஆற்­றினார். இந்த நிகழ்வில் பல சர்­வ­தேச ஊட­க­வி­ய­லா­ளர்கள் கலந்து கொண்­டனர்.

இதில் கருத்து தெரி­வித்த விக்­கி­னேஸ்­வரன்,

13 ஆவது திருத்த சட்டம் மூலம் மாகாண சபைக்கு வழங்­கப்­பட்­டுள்ள அற்­ப­மான அதி­கா­ரத்தை மகா­வலி அதி­கா­ர­சபை அத்து மீறு­வ­துடன் எமது நிலங்­க­ளையும் அந்த நிலங்கள் மீதான எமது உரி­மை­க­ளையும் இல்­லாமல் போகச் செய்யும் வல்­ல­மை­யையும் கொண்­டி­ருக்­கி­றது. ஆனால், இன்று வரை மகா­வலி ஆற்றில் இருந்து வடக்­குக்கு ஒரு துளி நீர் கூட வர­வில்லை .

வள­மான நிலங்­களில் இரா­ணுவம் விவ­சாயம் செய்து அந்த அறு­வ­டை­களை பெற்­றுக்­கொள்ளும் அதே­வேளை அந்த நிலங்­க­ளுக்கு சொந்­த­மான தமிழ் மக்கள் தற்­கா­லிக இடங்­களில் அக­தி­க­ளாக வாழ்­கின்­றனர் . இரா­ணுவம் மிகப்­பெரும் அளவில் வியா­பார முயற்­சி­க­ளிலும், தமது சொத்­துக்­களை பெருக்­கு­வ­திலும், நிர்­மாண செயற்­திட்­டங்­க­ளிலும், சுற்­று­லாத்­துறை செயற்­பா­டு­க­ளிலும் ஈடு­ப­டு­கி­றது.

“அனே­க­மாக போர்க்­குற்­றங்­களில் ஈடு­பட்ட 150,000 இரா­ணு­வத்­தினர் வடக்­கிலே நிலை­கொள்ளச் செய்­யப்­பட்­டுள்­ளமை எமது முன்­னேற்­றத்தை பாதிக்­கி­றது.எமது மக்­களின் வள­மான நிலங்கள் மற்றும் வீடுகள் இரா­ணு­வத்­தினால் எடுக்­கப்­பட்­டுள்­ளன. மேலும் மேலும் நிலங்­க­ளையும் வீடு­க­ளையும் வசப்­ப­டுத்­து­வ­தற்­கான விண்­ணப்­பங்கள் இரா­ணு­வத்தால் மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. என்னால் சாத்­தி­ய­மான அள­வுக்கு அவற்றை நிரா­க­ரித்­தி­ருக்­கிறேன்.

இலங்­கையின் மிகப்­பெ­ரிய ஆறான மகா­வ­லியில் இருந்து வடக்­குக்கு நீரை கொண்டு வருதல் என்ற போர்­வையில் எமது மாகா­ணத்­துக்குள் நிலங்கள் துப்­ப­ரவு செய்­யப்­பட்டு திறந்­து­வி­டப்­பட்டு வெளி இடங்­களில் இருந்து சிங்­கள மக்கள் கொண்­டு­வ­ரப்­பட்டு குடி­யேற்­றப்­ப­டு­கி­றார்கள்.

13 ஆவது திருத்த சட்­டத்­துக்கு வழங்­கப்­பட்­டுள்ள அற்­ப­மான அதி­கா­ரத்தை மகா­வலி அதி­கா­ர­சபை அத்து மீறு­வ­துடன் எமது நிலங்­க­ளையும் அந்த நிலங்கள் மீதான எமது உரி­மை­க­ளையும் இல்­லாமல் போகச் செய்யும் வல்­ல­மை­யையும் கொண்­டி­ருக்­கி­றது. ஆனால் , இன்று வரை மகா­வலி ஆற்றில் இருந்து இன்று வரை வடக்­குக்கு ஒரு துளி நீர் கூட வர­வில்லை.

இந்த நிலங்களில் தமது உரிமத்துக்கான உறுதிகளை தமிழ் மக்கள் வைத்திருக்கின்ற நிலையில் அங்கு குடியேற்றப்பட்டுள்ள சிங்கள மக்களுக்கு முன்னைய அரசினால் காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய அரசாங்கம் வந்த பின்னரும் இதனை ஒழுங்குபடுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று கூறினார்.