Breaking News

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் குறித்த விசாரணையை மீள ஆரம்பிக்க வேண்டும்

கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போனமை தொடர்பிலான விசாரணைகளை மீள ஆரம்பிக்க வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். 

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறினார். இதேவேளை, கோட்டே நாக விகாராதிபதி மாதுளுவாவே சோபித தேரரின் 73 வது பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற வைபவத்தில் ஜனாதிபதி கலந்து கொண்டார். 

அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக ஆதரவு வழங்கிய அணிகளை, ஆட்சிக்கு வந்த பின்னர் அரசாங்கம் மறந்து விடுவது வழமையான சம்பிரதாயம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்துள்ளார். 

ஆட்சிக்கு வந்த பின்னரும் தமது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக அந்த அணிகள் முன் நின்று செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.