Breaking News

ஐநா விசாரணை தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றமில்லை - பிரித்தானியா

இலங்கை இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் ஐநாவின் செயற்பாடுகளின் பின்பற்ற முழுமையான அர்ப்பணிப்புடன் உள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் அலுவகத்தால் முன்னெடுக்கப்படும் யுத்தக் குற்றச்சாட்டுகள் விசாரணை தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றம் மேற்கொள்ளப்பட மாட்டாது என பிரித்தானியா கூறியுள்ளது.

இலங்கையின் உள்ளக விசாரணைக்கு ஆதரவு வழங்குவது குறித்து பிரித்தானியாவுடன் அமெரிக்கா கலந்துரையாடியதா என வினவிய போதே கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானியர் ஆலயம் இவ்வாறு கூறியுள்ளது. 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்காவின் அனுசரணையுடன் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை அடிப்படையாக கொண்டு ஜெனிவாவை தளமாக கொண்ட மனித உரிமைகள் பேரவை இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பான வெளிப்படையான முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் மனித உரிமைகள் பேரவை முன்னெடுக்கும் விசாரணை மற்றும் செம்டெம்பர் மாதம் வெளியிடப்படவுள்ள அதன் அறிக்கை உள்ளடங்கலாக ஐநாவின் செயற்பாடுகளுக்கு பிரித்தானிய ஆதரவளிக்கும் என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆலயத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இந்த செயற்பாடுகளின் பின்னர் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புகூறல் விடயங்களில் ஸ்ரீலங்கா எவ்வாறான முன்னேற்றங்களை கண்டுள்ளது மற்றும் மனித உரிமைகள் பேரவை அறிக்கையின் பரிந்துரைகளை எவ்வாறு அமுல்படுத்தப் போகின்றது என்பதை பொறுத்து ஏனைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு பொறுப்புகூறல் நடவடிக்கையும் நம்பகமானதாகவும் அனைத்து தரப்பினரையும் உள்ளக்கியதாகவும் வெளிப்படையனதாகவும் அமைவதுடன் சுயாதீனமானதாகவும் சர்வதேச தரங்களை பின்பற்றியும் இருக்க வேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.