Breaking News

'கபாலி' ரஜினிக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு!

´கபாலி´ படத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்க எதிர்ப்புத் தெரிவித்து, சென்னை, வேளச்சேரியில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. 

தமிழ்நாடு ஏழை எளியோர், நடுத்தர மக்கள் நல சங்கத்தினர், வேளச்சேரி பேருந்து நிலையம் அருகே, இந்த உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர். 

பின், ரஜினிகாந்த் உருவ படத்தை எரித்து, தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.  இதையடுத்து, சங்கத்தின் தலைவர் லிங்கபெருமாள் கூறியதாவது: 

இலங்கை தமிழர்கள் மற்றும் ஆந்திராவில், 20 தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்டதற்காக, குரல் கொடுக்காத ரஜினிகாந்த், தமிழர்களுக்கு குரல் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வெற்று விளம்பரம் தேடுகிறார். அவர், கபாலி படத்தில் நடிக்கக் கூடாது; படத்தை தடை செய்ய வேண்டும்,இவ்வாறு அவர் கூறினார்.