Breaking News

சுதந்திரக் கூட்டமைப்பின் ''கூட்டணி கட்சிகள்'' விலகிச் செல்கின்றன!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டணிக் கட்சிகள் விலகிச் சென்று புதிய முன்னணியொன்றை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

மக்கள் ஐக்கிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உருமய, லங்கா சமசமாஜ கட்சி, நவசமசமாஜ கட்சி, ஶ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளே இந்த புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இம்முறை தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதில் கூட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நியாயத்தை நிலைநாட்டவில்லையென இந்தக் கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

எவ்வாறாயினும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 1989ஆம் ஆண்டு முதல் இதுவரை தேர்தலில் தனித்துப் போட்டியிடவில்லை என்பதுடன், எதிர்வரும் தேர்தல்களில் அந்தக் கட்சி தனித்துப் போட்டியிடுமாயின் பாரிய சவாலை எதிர்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.