Breaking News

தமிழர் பகுதியில் சிங்கள குடியேற்றம்: கண்டி தெல்வத்த பகுதியில் பதற்றம்!

கண்டி தெல்வத்த பகுதியில் தற்போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் சிறுபான்மையினத்தவர்களுக்கு சொந்தமான காணிகள் சில பெரும்பான்மையினத்தவர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளமையினைத் தொடர்ந்தே அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, கண்டி தெல்வத்த பகுதியிலுள்ள சிறுபான்மையினத்தவர்களுக்கு சொந்தமான காணிகளை பெரும்பான்யினத்தவர்களுக்கு பிரித்து கொடுக்கும் முயற்சியில் அப்பகுதி அரசாங்க அதிபர், மற்றும் அந்த பகுதிலுள்ள பிரபல அரசியல்வாதி ஒருவர் ஈடுபட்டதாகவும் அதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்தும் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறானதொரு நிலையில் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) குறித்த பகுதிக்கு சென்ற அரசாங்க அதிபர், மற்றும் அந்த பகுதிலுள்ள பிரபல அரசியல்வாதி ஆகியோர் புதிய குடியேற்றம் ஒன்றினை அமைக்கும் வகையில் அடிக்கல் நாட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மாவட்ட அரசாங்க அதிபர் அலுவகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.