Breaking News

இனவாதம் வேண்டாம், அரசியல் கைதிகள் விடுதலையாவதில் தவறில்லை – லக்ஷ்மன் செனவிரத்ன

மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியில் 12 ஆயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்க்காதவர்கள் தற்போது 39 பேர் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டதை எதிர்ப்பதில் எந்தவித நியாயமும் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டத்தின் மீதான இரண்டாம் வாசிப்பில் பங்கேற்றும் உரையாற்றிய போது நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரத்ன இவ்வாறு கூறியுள்ளார்.

இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து இணக்கப்பாடான அரசாங்கமொன்றை அமைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நிலவுகின்ற குறைபாடுகளை கலந்துரையாடி தீர்வுகளை கண்டு, முன்னோக்கி செல்லும் போதே இந்த ஆட்சியின் சாதக பாதகங்களை அறிந்துகொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2010 ஆம் ஆண்டு அப்போதைய சட்டமா அதிபர்மொஹான் பீரிஸ்சின் பணிப்புரையில் பாரிய குற்றங்களுடன் தொடர்புடைய 140 விடுதலைப் புலி உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனவிரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

எனும் தற்போது 39 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து இனவாதத்தை சிலர் துண்டுவதாக குறிப்பிட்ட அவர், இனியும் நாட்டில் இனவாதம் வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.