Breaking News

போர்க்குற்ற விசாரணையின் போது வெளிநாட்டு நீதிபதிகளை ஏற்கமுடியாது - சட்டத்தரணிகள் சங்கம்

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் அமைக்கப்படவுள்ள உள்நாட்டு பொறிமுறைக்குள் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கமுடியாது என்று தீர்மானத்தை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எடுத்துள்ளது.

இந்த விடயம் அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளக்கூடியதாக இருக்கமாட்டாது என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது கடந்த வார இறுதியில் கூடிய சங்கத்தின் உறுப்பினர்கள், நாட்டின் அரசியலமைப்பு, பங்காளார்களின் நம்பிக்கை என்பவற்றை கருத்திற்கொண்டு இந்த விடயத்தில் முடிவெடுக்கப்பட வேண்டு;ம் என்று கேட்கப்பட்டுள்ளது.

இது நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கையாக இருக்காது என்றும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.இதேவேளை ஐக்கிய நாடுகளின் ஜெனீவா இணக்கம், உதாலகம அறிக்கை, பரணகம அறிக்கை என்பவற்றின் அடிப்படையில் நல்லிணக்கம் தொடர்பில் இன்னும் பரந்துபட்ட நடவடிக்கைகள் தேவை என்பது உணரப்படுகிறது.

இதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகளை துரிதமாக விசாரணை செய்ய ஜனாதிபதியினால் முன்னாள் நீதிபதி ஐராங்கனி பெரேரா நியமிக்கப்பட்டமையை சட்டத்தரணிகள் சங்கம் ஆட்சேபித்துள்ளது. நடைமுறையில் திறமையான நீதிபதிகள் சேவையில் உள்ளபோது முன்னாள் நீதிபதியின் அவசியம் இல்லை என்றும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.