Breaking News

ரஜினியுடன் மோதும் விஜய்?

இளைய தளபதி விஜய், தீவிர ரஜினி ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவர்கள் இருவருக்குமே நல்ல ரசிகர்கள் வட்டம் உள்ளது.

அதிலும் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் வட்டம் பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ரஜினி தற்போது கபாலி படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் தெறி படத்தில் நடிக்க, இந்த இரண்டு படங்களுமே ஏப்ரல் மாதத்தில் தான் வெளிவரவிருக்கின்றதாம். ஏற்கனவே முத்து-சந்திரலேகா, சந்திரமுகி-சச்சின் ஆகிய படங்கள் நேருக்கு நேர் மோதியது குறிப்பிடத்தக்கது