Breaking News

வட மாகாண ஆளுநராக தமிழரை நியமிக்க அரசு அஞ்சுவது ஏன்? சிவாஜி கேள்வி

வட மாகாண ஆளுநராக தமிழ் அல்லது முஸ்லிம் ஒருவரை நியமிக்க அரசு ஏன் தயக்கம் காட்டி வருகிறது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

வட மாகாண ஆளுநர் பளிஹக்கார இன்றைய தினத்துடன் பிரியாவிடை பெறுகின்ற நிலையில், புதிய ஆளுநராக ரெஜினோல்ட் குரே நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், வட மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ள முன்னாள் அமைச்சர் ரெஜினால்ட் குரே சிறந்த அரசியல் அனுபவம் கொண்டவர் என்ற ரீதியில் அவரது நியமனத்தை தாம் எதிர்க்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும் வடமாகாண சபையின் ஆளுநராக தமிழ் அல்லது முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்படுவது விரும்பத்தக்கது எனவும் குறிப்பிட்டுள்ளார். அப்பதவிக்கு தமிழ் அல்லது முஸ்லிம் நபர் நியமிக்கப்படுவாராயின் அது நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு படிக்கல்லாக அமையும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.