Breaking News

கலிங்கத்தில் அசோகன்! முள்ளிவாய்க்காலில் மஹிந்த

1956 தொடங்கிய சிங்களத் தலைவர்கள் வரிசையில் பண்டாரநாயக்க முதல் 2016 மைத்திரியும் அனைவரும் தங்களது பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்கு தமிழருக்கு எதிரான சிங்கள இனவாதத்தை வளர்ப்பவர்கள் தான். பேரினவாதத்திற்கு அடங்கியவர்கள்.

இவர்களது அறிக்கைகள், செயலற்ற வாக்குறுதிகள், முன்னெடுப்பு நம்பிக்கையை உதறித்தள்ளி மாறாக இனவாதப் பேய்கள் குதறிய விளைவுகளைத்தான் இன்றுவரை கண்டோம்.

1958- 1958- 1977- 1979- 1981- 1983- 2009 தொட்டுத் தொட்டு முற்றாக இனத்தையே கொன்றார்கள்.

1987—1989 இந்தியா சமாதானப் படையாக நுழைந்து இரண்டு ஆண்டுகள் இனம்தான் அழிந்தது. எதுவித சமாதானமும் இடம்பெறவில்லை :

அறப் போராட்டம், அறிவுப் போராட்டம் நடத்தித் தமிழர் உரிமைக்காக மானம் காக்க அமைதிப் போராட்ட த்தின் போது எத்தனை விதமான பேய்களின் வாயில் சிக்கி பதறக் கதற இனத்தைக் குதறித் தின்றார்கள்

ஆயுதப் போராட்டத்தில் மீட்ட தமிழீழ இராச்சியம் புலிகளின் காலம் தனியாட்சி நடந்த காலம் வரலாறு போற்றிப் புகழ வாய்விட்டு பேசிமகிழும்.

அக்காலத்தில் நடந்த சமாதானப் பேச்சுக்களுடன் முள்ளிவாய்க்கால் இனக்கொலை நிகழ்வுகள் கொடூரத்தின் கடூரம் சிலவற்றை மீட்டிப்பார்ப்போம்.

முதலாம் கட்டப் பேச்சு-

தமிழீழப் புலிகளுடன் கிழநரியின் குட்டிநரி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான சிறிலங்கா அரசுடனான முதல் பேச்சுவார்த்தைக் கூட்டம் தாய்லாந்தில் சதாகிய கடற்படைத் தளத்தில் 19 மே முதல்18 செப்டம்பர் 2002 வரை நடந்து சுமுகமாக முடிந்தது.

இரண்டாவது கட்டப் பேச்சு-

தாய்லாந்தின் பத்தொம் நகரில் அக்டோபர் 31. நவம்பர். 3 நாட்கள் இரண்டாவது பேச்சுவார்த்தை காரசாரமாக கர்ச்சனையைக் காட்டி நடந்து முடிந்தது

மூன்றாவது கட்டப் பேச்சு-

நோர்வே தலைநகர் ஒஸ்லோ நகரில் 2002 மார்கழி 2 முதல்5 வரை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் இருதரப்பும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியது.

நாலாவது கட்டப் பேச்சு-

2003 தை 9 வரையில் தாய்லாந்தின் நகரோன் பத்தோம் நகரில் நடந்தது போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது

ஐந்தாவது கட்டப்பேச்சு-

ஜெர்மனி பெர்லின் நகரில் நடந்தது 7-8 பெப்ரவரி இரண்டு நாட்கள் சிறுவர்களைப் போராளியாக்கும் பிரச்சினை மனிதஉரிமை பற்றி இரண்டு நாள் நடந்தது.

பின்னர் மார்ச் 10.2004 அன்று விடுதலைப் புலிகள் கப்பல் திருகோணமலை 220 கடல் மைல்களுக்கு அப்பால் சிறிலங்கா கடற்படையினரால் மூழ்கடிக்கப்பட்டது. பிளந்தது பேச்சும்-வார்த்தையும், அதிர்ந்தது திசைகள்.

ஆறாம் கட்டப் பேச்சு-

ஜப்பான் நாட்டில் காக்கோனெ நகரில் மார்ச் 18.முதல் 21 வரையில் ஆறாவது பேச்சுவார்த்தைக் கூட்டம் இராணுவம் விலக்குதல் இயல்பு நிலை சம்பந்தம் ஈடுபாடு ஏற்படாததால் முன்னேற்றம் எதுவுமின்றி இந்தியச் சதிகாரன் சதீஷ் நம்பியார் 2003. ஏப்ரல் இறுதியில் ரணில் விக்ரமசிங்கவிடம் கொடுத்த இறுதி அறிக்கையுடன் முடிந்தது.

இக்காலப் போக்கில் தமிழர் மேல் மூண்டெரியும். வெறுப்பு பிரிவு மனமுறிவு பிணக்கு கொடும் கோபம் இவை மூலவிசையாக மூர்க்கத்தனமாக விளையாடும் போக்குகள் அகலவில்லை.

தமிழினத்தின் சாபக் கேடு தலைமுறைக்கும் இதுதொடர்வது. இன்றைய தலைமுறை இக்கேடுகெட்ட பாதையை விரும்பாது.

புலம்பெயர் தேசத்து அவல வாழ்விற்குள்ளும் வெறிபிடித்த எழுச்சியுடன் எழவே துடிக்கின்றார்கள்.சத்தியம் வீரம் நிறைந்த விடுதலைப் புலிகள் பாதையைத் தேடித்தான் முள்ளிவாய்க்கால் 7ஆண்டு நினைவைச் சுமக்கின்றனர்.

ரணிலின் நாடகம் தொடர் இனவாதத்தின் சாணக்கியம். கலிங்கம் போரின் காட்சிகளாக கட்டியக்காரன் கூற்றாக இராஜதந்திரம் உலகெங்கும் பரவியது:ஜனாதிபதியாக இருந்த சந்திரிகாவின் சகல பட்ச நிறைவேற்று அதிகாரங்கள் அனைத்தும் தமிழர்களுக்கு எதிரான இனவாதத்தையும் கதிர்காமர் என்ற தமிழ் கொள்ளிவாய்ப் பேயைச் சர்வதேசத்தில் பறக்கவிட்டாள்.

ரணில் வலப்பக்கச் சிறகில் அமர்ந்து விடுதலைப் புலிகளை அழிக்கும் படலத்தைப் பாகம் பாகமாகப் பிரித்து உலகம் முழுதும் விளக்கினான்.

2005.மே.22 பிணம் தின்னும் பேய் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்தான். வந்தவீச்சில் இனித் தமிழன் உயிரோடிருந்தால் சிங்களவன் நடுநடுங்கி நாளும் வாழும் பயபீதியே சிங்கள மக்கள் அடைய நேரிடம் சக நிதித்துறையைக் கையிலெடுத்தான், திட்டங்களை இந்திய ஆட்சியாளர்களுக்கு விளக்கினான்.

சிறிலங்காவில் மக்களாட்சிக் கோட்டையில் சிங்களவனோடு அன்பாக நெருக்கமாக ஒன்றாக இருந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சுட்டுக் கொலை செய்தது ராஜபக்ச கும்பல்.

எங்கே தார்மீகம்? எங்கே மனிதம்? கடுகளவும் பேரினத்திடம் எதிர்பார்க்க முடியாது.2005 டிசம்பர் முதற்கட்ட வன்முறையைத் தொடங்கிப் பயங்கரவாதத்தின் அதி பயங்கர வேடத்தை ஆடத் தொடங்கினான். வெள்ளை வான் கடத்தலில் சிவப்பு விளக்கு எரிந்தது.24.மார்கழி 2005 கிறிஸ்து பிறப்பின் வழிபாட்டில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் ஆலயத்திற்குள் நள்ளிரவில் இராணுவக் காடையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்:

அவருக்குப் பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடளுமன்ற உறுப்பினர் வன்னியசிங்கம் விக்னேஸ்வரன் திருகோணமலைக்குச் செல்லும் வழியில் 2006 சித்திரை 7 சுட்டுக் கொல்லப்பட்டார்.

நாடளுமன்ற உறுப்பினர் தேர்வுப் பட்டியலில் இருந்த திரு.ஆறுமுகம் செந்தில்நாதன் வவுனியாவில் சித்திரை 25. 2006 சுட்டுக் கொல்லப்பட்டார்.யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் தலைநகர் கொழும்பில் கார்த்திகை 8. 2006 சுட்டுக் கொல்லப்பட்டார்.மாசி 23. 2006 மட்டகளப்பு செல்லும் வழியில் அம்பாறை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சந்திரநேரு சுட்டுக் கொல்லப்பட்டார்:

2006 ஆவணி 21 சின்னத்தம்பி சிவராசா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டுக் கொல்லப்பட்டார்.2006 கார்த்திகை 29 வவுனியா நாடளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் மயிரிழையில் தப்பினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசன் பங்குனி 6.2008 ஊருக்குச் செல்லும் வழியில் மாங்குளம் அருகில் சிறிலங்கா இராணுவக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

சர்வதேச ஊடகங்கள் ஐ.நா அமைப்புகள் தொண்டர்கள் ஸ்தாபனங்கள் அனைத்தும் ராஜபக்ச வெளியேற உத்தரவிட்டு சாட்சிகளில்லாமல் தமிழர்கள் மீது கொலைவெறி இனப்படுகொலையைத் தொடங்கினான்.

முள்ளிவாய்க்காலில் சர்வதேசம் ஆடியது நாடகம். “தமிழில் இது என்ன வகைக் கூத்து என்பதை தமிழக முதல்வராக இருந்த மூத்தறிஞர் கலைஞர் கருணாநிதியிடம் தான் கேட்கவேண்டும்”.

7ஆண்டு கடந்தும் கிழநரி பதவி ஆசையில் ஊர்ந்தபடி கொலைகாரக் காங்கிரஸ் கூட்டணியில் தான் கேவலம் 94 வயதிலும் நஞ்சை எங்கே கக்குவது என்பது தெரியாமல்.?

என்ன சொல்கிறார் பாருங்கள் 10 வயது தொடங்கி அரசியல் பணி ஆற்றுகிறேன். தமிழர்களைக் காப்பாற்ற நம்மைவிட்டால் யாருமில்லை.

வேறு யார் காப்பாற்றப் போகிறார்கள் நாம்தான் காப்பாற்ற வேண்டும்”.நான் (கருணாநிதி) சீரோடும் சிறப்போடும் நடப்போம் என்று 27.04.2016 தஞ்சாவூர் கூட்டத்தில் ஈவுயிரக்கமற்ற நஞ்சன் பேசுகிறான்.

18 மே 2009 இந்த நாளில் தமிழன் கொல்லப்படும் போது எங்கே போனது இந்த உருக்கம்? ராஜபக்சவுடன் சேர்ந்த படுபயங்கரக் குற்றவாளி கலைஞர் கருணாநிதி என்பார்.

இந்தப் பயங்கரவாதத் தாண்டவம் ராஜபக்ச கும்பல் நடத்திய போது சர்வதேசம் மௌனம். முள்ளிவாய்க்கால் இனக்கொலையைத் தீர்மானித்து விட்டனர் ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கும் நடவடிக்கைகள் தீவிரமடைந்தது.

விடுதலைப் புலித் தiலைமை அறிந்த விடயம். சிங்கள ஊடகவியலாளர்கள் பொதுமக்கள் மீது இராணுவம் “ஆயுதக்குழுக்கள் கருநாகம் கருணா–விஷப்பாம்பு டக்ளஸ் இனம் அழியப் பரவலாக ஈடுபட்டனர்”.

முள்ளிவாய்க்கால் திட்டமிட்டபடி இனத்தைக் கொன்றழிக்க தொடங்கியது படுகொலைகள் புரிந்து முடித்தான்.

7ஆண்டுகளின் பின்பும் இனத்துவாதம் இனவெறியாட்டம் முடிவுக்கு வரவில்லை-காணாமல் போனவர் அபயக்குரல் அடுத்தடுத்து தினமும் பலர் கைதுகள் கடத்தல்கள் விசாரணை என்ற போர்வையில் சித்திரவதைகள் சிறை இராணுவத் தேடல் முள்ளிவாய்க்கால் நினைவு நெருங்க நெருக்கும் இனவெறியாட்டம் தீவிரமடைகிறது:

தாய்மாரின் குரல் வான்முட்டி விழுந்து நெஞ்சைப் பிளக்கிறது தமிழன் வாழும் காலம் கண்ணீரும் இரத்தமும் விலங்கும் சிறையும் அவலமும்தான் “தலைமுறை வாழ்வு நீரின் எழுத்தா?”புலிகள் ஆண்டால்தான் மீட்சியும்.

நல்லாட்சியும் மகிழ்ச்சியான வாழ்வும் வரும் என்று வாழ்வோர் பாக்கியசாலிகள்.

புலத்தில் வாழும் தமிழா நிலத்தின் வாழ்வும் வீரமும் தியாகமும் சீரிய ஒழுக்கமும் கட்டுப்பாடும் இலட்சிய வேட்கையும் தளராத தலைமுறையாக வாழுங்கள், முள்ளிவாய்க்கால் கண்மணிகளை உயிரான உறவுகளை என்றும் நினைவில் சுமந்துகொண்டு வாழுங்கள்.

கலிங்கப் போர்க்களத்தில் குருதியும் உயிரிழப்புகளும் மனித மாமிசக் குவியலும் மௌரிய மன்னன் அசோகனைப் போரை வெறுத்து பௌத்த நெறியைத் தழுவ வைத்தது பரவியது உலகெங்கும் பௌத்தம்.

அசோகன் நடத்தியது போர்..இனவெறியன் ராஜபக்ச நடத்தியது இனப்படுகொலை.

இந்தியா அசோகனின் தர்மச் சக்கரத்தைக் கொடியில் பதித்தபடி தமிழீழத்துக்குள் வந்து பாலியல் படு கொலைகளை விதைத்து கொடூரமான அட்டகாசங்கள் புரிந்தவர் சிறிலங்காவுடன் இன்றும் கைகோர்த்து இறுக்கமாக நிற்பது என்ன தர்மம்?சர்வதேசம் இரகசியங்களை அறிந்துவிடும் பயம்

அதர்மத்தின் கொலைகளைக் காந்தியும் புத்தனும் பார்த்தபடியேதான்.. இலட்சம் தமிழர் கொலை நடந்து 7ஆண்டுகள். யாராண்டாலும் சிங்களவன் வேறு –தமிழன் வேறுதான்.

சர்வதேசமே அங்குமிங்கும் தூண்டிவிட்டுத் தூங்காதே: இந்தியாவே காந்தியின் தடியைப் பறித்து தலையில் அடி தமிழனை மீட்கும் புத்தி வரட்டும்.

கவிஞர் மா.கி.கிறிஸ்ரியன்