Breaking News

ரணிலை சந்தித்தார் மூன்



மூன்று நாள் பயணமாக நேற்றுமுன்னிரவு கொழும்பு வந்த ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்றிரவு பேச்சுக்களை நடத்தினார்.

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நேற்று முன்னிரவு 7.30 மணியளவில் சிறிலங்காவை வந்தடைந்தார். அவரை சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வா, வெளிவிவகாரச் செயலர் எசல வீரக்கோன் மற்றும் ஐ.நா அதிகாரிகள் வரவேற்றனர்.

இதையடுத்து, நேற்றிரவு அலரி மாளிகையில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து பான் கீ மூன் பேச்சுக்களை நடத்தினார்.

இன்று அவர் சிறிலங்கா அதிபர் மற்றும் அமைச்சர்களுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார். அத்துடன் காலியில் நடைபெறும் இளைஞர் மாநாட்டிலும் உரையாற்றுவார்.

நாளை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், யாழ்ப்பாணம் சென்று மீளக் குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடவுள்ளதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடக்கு மாகாண ஆளுனர், முதலமைச்சர் ஆகியோரையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.