வடக்கு “ஆவா” குழுவை கட்டுப்படுத்த இராணுவம் அரசாங்கத்திடம் அனுமதி கோரல் - THAMILKINGDOM வடக்கு “ஆவா” குழுவை கட்டுப்படுத்த இராணுவம் அரசாங்கத்திடம் அனுமதி கோரல் - THAMILKINGDOM
 • Latest News

  வடக்கு “ஆவா” குழுவை கட்டுப்படுத்த இராணுவம் அரசாங்கத்திடம் அனுமதி கோரல்  வடக்கில் செயற்படும் “ஆவா” குழுவினால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திடம் இராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

  உத்தியோகப் பற்றற்ற ரீதியில் இந்த வேண்டுகோளை இராணுவம் விடுத்துள்ளது. அவசரகால நிலைமை அமுலில் இல்லாததனால் சிவில் நிலைமையில் தலையீடு செய்ய முடியாதுள்ளதாகவும் இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது.

  வடக்கில் பாதுகாப்பற்ற ஒரு நிலைமை உருவாகி வருவது ஆபத்தானது என புலனாய்வுத் துறை அரசாங்கத்துக்கு சுட்டிக்காட்டியுள்ளது.

  இதேவேளை, வடக்கில் இயங்கிவரும் இந்த ஆவா அமைப்பின் பின்னணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரு அரசியல்வாதிகள் செயற்படுவதாக தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: வடக்கு “ஆவா” குழுவை கட்டுப்படுத்த இராணுவம் அரசாங்கத்திடம் அனுமதி கோரல் Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top