தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கதறி அழுது அஞ்சலி - THAMILKINGDOM தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கதறி அழுது அஞ்சலி - THAMILKINGDOM
 • Latest News

  தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கதறி அழுது அஞ்சலி  உடல்நலக் குறைவால் உயிரிழந்த ஜெயலலிதாவின் உடலுக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கதறி அழுது அஞ்சலி செலுத்தினார்.

  அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ஜெயலலிதாவின் உடல் சென்னை ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

  ஜெயலலிதா உடலுக்கு தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஓ.பன்னீர் செல்வம் அஞ்சலி செலுத்தினார். அப்போது தன்னுடைய உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதார்.

  அவரை தொடர்ந்து, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.

  அதேபோல், அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழக அரசின் உயர் அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

  அஞ்சலி செலுத்துவதற்காக மக்கள் ராஜாஜி அரங்கத்திற்குள் வரிசையாக வந்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கதறி அழுது அஞ்சலி Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top