Breaking News

நல்லாட்சி அரசும் பட்டதாரிகளைக் கண்டுகொள்ளாமை வேதனையளிக்கின்றது



நாட்டில் உள்ள அமைச்சுக்களில் நிலவும் வெற்றிடங்களுக்கு தமிழர்களை நியமித்தால், பட்டதாரிகள் தெருவில் நிற்கும் நிலை ஏற்படாது என்று சிறுவர் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் அதிகளவில் பட்டம் பெற்று வெளியேறிய பெண்கள் உட்பட பட்டதாரிகள் வீதியில் நிற்பது வேதனையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் நேற்றையதினம் இடம்பெற்ற நில மெஹெவர ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சிச் திட்டம் தொடர்பில் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வடமாகாணத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் செயற்கை மாற்றுத்திறனாளிகள் ஆக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், பட்டதாரிகளாக இருந்தும் அதிகளவானோர் மாற்றுத்திறனாளிகளாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் பட்டதாரிகள் எதிர்நோக்கும் இந்த பிரச்சனை குறித்து நல்லாட்சி அரசாங்கம் கூட அக்கறை செலுத்தாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்று நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா சாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.