Breaking News

புலிகளின் நிதியை உள்வாங்கவா... பணமாற்று கட்டுப்பாட்டு சட்டமூலம்.?



சீன முதலீடுகளை விட புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளே இலங்கைக்கு உகந்தது என்று நோர்வேயின் எரிக் சொல்ஹிம் இந்திய ஊடகத்திற்கு குறிப்பிட்டிருந்தார். இதனை அங்கீகரிக்கும் வகையில் விடுதலை புலிகளின் நிதியை சட்ட விரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வருவதற்காகவே அரசாங்கம் பணமாற்று கட்டுப்பாட்டு சட்டமூலத்தை கொண்டு வருவதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

ஜீஎஸ்பி வரி சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்வதாயின் தேசிய பாதுகாப்பு மற்றும் கலாசாரம் உள்ளிட்ட அனைத்தையும் விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் தமிழ் தேசிய கூட்டணி போன்று அரசாங்கத்தின் கைக்கூலியாகாது கூட்டு எதிர் கட்சி நாட்டிற்கான கடமைகளை செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

கூட்டு எதிர் கட்சியின் விஷேட ஊடக சந்திப்பில் பொரல்லையில் அமைந்துள்ள ஸ்ரீ வஜிராஷ்ரம பௌத்த மத்திய நிலையத்தில் நேற்று நடைப்பெற்றது. இதில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.