Breaking News

யானை தாக்கி குடும்பஸ்தர் பலி ; இருவர் படுகாயம் - வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில்

மருதங்கேணி பகுதியில் புகுந்த மதம் கொண்டயானை தாக்கியதில் மாடு மேய்க்கச் சென்ற குடும்பஸ்தர் ஒரு வர் பரிதாபகரமாக உயிரிழந்ததுடன் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ள னர்.

இச்சம்பவத்தில் மருதங்கேணி தெ ற்கைச் சேர்ந்த சிற்றம்பலம் சத்திய சீலன் (வயது54) என்ற குடும்பஸ்தர் பலியாகியுள்ளார். உடுத்துறையைச் சேர்ந்த நடராசா முருகதாஸ், மருத ங்கேணி தெற்கைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை குமார் ஆகிய இருவர் படுகா யமடைந்ததுடன், யானையைக் கண்டு ஓடிய இன்னொருவர் கம்பிக்குள் விழுந்து சிறுகாயமும் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை உடு த்துறை ஆழியவளைப் பகுதிக்குள் காட்டுயானை ஒன்று நுழைந்ததாகவும் மயிரிழையில் ஒருவர் தப்பியதாகவும் மருதங்கேணிப் பிரதேச செயலாளர் கே.கனகேஸ்வரனிற்கு பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டது.

கடற்படை, இராணுவத்தினர், பொலிஸார், வனவிலங்கு பாதுகாப்புப் பிரிவி னருக்கு அறிவித்ததையடுத்து அப்பகுதிக் காடுகளில் தேடுதல் நடத்திய போதி லும் யானையினைக் காணமுடியவில்லை.

இந்நிலையில் நேற்றுக் காலை மாடு மேய்ப்பதற்காக சென்ற சிற்றம்பலம் சத்தியசீலன் என்பவரே மருதங்கேணிப் பகுதியில் யானை தாக்கியதில் உயி ரிழந்துள்ளார்.

இதன்பிற்பாடே யானை மருதங்கேணிப் பகுதிக்குள் என பொது மக்கள் அறிந்து யானை வந்ததான தகவல் பரவியதையடுத்து வேடிக்கை பார்ப்பதற்காக அங்கு சென்றவர்களே யானையின் தாக்குதலுக்கு இலக்காகியதாக தெரிவிக்கப்படு கின்றது.

இச் சம்பவம் அறிந்த மருதங்கேணிப் பிரதேச செயலர் கே.கனகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் மருதங்கே ணிக்கு உடனடியாக விஜயம் செய்து உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு யானையினை அகற்றுவதற்கான நடவடிக்கையினை எடுக்குமாறு பணித்துள்ளனர்.

மேலும் மருதங்கேணி முதல் உடுத்துறை வரையான பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.