Breaking News

வியாழேந்திரன் - சிறிதரன் முரண்பாடு சக உறுப்பினர்கள் விலக்கு !

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங் கம் வகிக்கும் தமிழரசுக்கட்சி உறுப்பி னர் சிறிதரன், புளொட் உறுப்பினர் வியாழந்திரன் இருவருக்குமிடையி ல் ஏற்பட்ட முரண்பாட்டின் நிமித்தம் வியாழந்திரன் மீது தாக்க முயற்சி த்தாக தகவல்கள் வெளியாகியுள்ள ன. நாடாளுமன்ற கட்டடத் தொகுதி யில் இன்று வியாழக்கிழமை முற்ப கல் இச் சம்பவம் நடைபெற்றதென வும் மாகாண சபைகள் தேர்தல் திருத்தச்சட்டத்திற்கு சார்பாக வாக்களி க்காமல் வெளியேறிய தன் காரணமாக  சிறிதரன் வியாழேந்திரனை வெகு விமர்சியாக எச்சரித்தாகக் தெரிவிக்கப்படுகின்றது.  

இருவருக்குமிடையில் மூண்ட வாய்த்தர்க்கம் மூண்ட நிலையில் சிறிதரன், வியாழேந்திரன் மீது கைகலப்பு ஏற்பட்ட நிலையில் சக உறுப்பினர்கள் இரு வரையும் தாக்கிப்பிடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நேற்றைய புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற மாகாண சபைகள் திருத்தச் சட்ட மூலத்திற்கான வாக்கெடுப்பில் ஈபிஆர்எல்எப், புளொட், ரெலோ போன்ற கட்சிகள் வாக்களிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.  

இவ்வாறான நிலையிலேயே தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் முரண்பாடுகள் மேலோங்கியதுடன்  தமிழரசுக் கட்சி உறுப்பினர்களும் மேற்படி கட்சிகளின் உறுப்பினர்களும் ஒருவருக்கொருவர் விழியோரங்களால்  கர்ச்சித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந் நிலையில் புதிய அரசியல் யாப்புக்கான வழிகாட்டல் குழுவின் இடை க்கால அறிக்கையை சம்பந்தன் பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.