Breaking News

ஜெனிவாவில் தமிழ்ச்செல்வனின் மனைவி மற்றும் தமிழகத்தின் வை கோபால்சாமி

வவுனியா இராணுவ ஜோசப் முகாமி ல் தடுத்து வைக்கப்பட்டிருந்த வே ளை மீள, மீள இராணுவத்தினர் வந்து என்னிடம் தலைவர் பிரபாகரன் தொட ர்பான விபரங்களை வற்புறுத்திக் கே ட்டார்கள்.  என விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களின் மனை வி சசிரேகா குறிப்பிட்டுள்ளார். 

ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது கூட்ட த்தொடர் கடந்த 11 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகிய இந்நிலையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உள்ளக அரங்கில், நேற்று இடம்பெற்ற அமர்வில் கலந்து கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கும் போது, 16.05.2009 அன்று, நான் இராணுவத்தினரிடம் பிடிபட்டேன். புதுக்குடியிருப்பிலிருந்து என்னை இன்னோர் இடத்திற்கு இடம் மாற்றினார்கள். 

அவ் இடத்திலிருந்து நானும் எனது பிள்ளைகளும், பாப்பா அண்ணன், ரூபன் அண்ணன் மற்றும் எங்களுடன் கூட வந்தவர்களும் அழைத்தச் செல்லப்பட்டு அங்கு ஒரு வீட்டின் அறைக்குள் 3 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டி ருந்தோம். 

தமிழ்செல்வனின் மனைவி என்று சொன்னால் இராணுவம் உங்களை கொன் விடுமெனவும் மாற்றுக் குழுக்களின் கண்ணில் பட்டுவிடாதீர்கள் எனவும் புதுக்குடியிருப்பு முகாம் கொமாண்டார் என்னிடம் சொல்லி அனுப்பியுள்ளார்.