Breaking News

மனித குலத்துக்கு எதிராக இராணுவம் செயற்படவில்லையாம் - இராணுவத்தளபதி!

மனித குலத்­துக்கு எதி­ரான போரை இலங்கை இரா­ணு­வம் செய்­ய­வில்லை என்­பதே எமது உறு­தி­யான நிலைப்­பாடு. இரா­ணு­வம் மீது முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டு­ க­ளுக்­குப் போதிய சாட்­சி­கள் இல்லை. 

குற்­றச்­சாட்­டு­கள் தொடர்ந்து முன்­வைக்­கப்­ப­டுமாக இருந்­தா­லும் விசா­ர­ணை­க­ளுக்கு முகம்­கொ­டுக்க நாங்­கள் தயா­ரா­கவே உள்ளோம். என இரா­ணு­வத் தள­பதி லெப்.ஜென­ரல் மகேஷ் சேனா­நா­யக்க தெரி­வித்­துள்­ளார்.

மேலும் தெரி­விக்கையில்...... 

இலங்­கை­யில் நடை­பெற்ற இறு­திப் போரில் ஈடு­பட்ட மற்­றும் மனி­தா­பி­மான நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­பட்ட இரா­ணு­வத்­தி­னர் போர்க்­குற்­றங்­க­ளில் ஈடு­ப­ட­வில்லை. இரா­ணு­வத்­தி­னர் சில குற்­றங்­க­ளில் ஈடு­பட்­ட­னர் என்ற குற்­றச்­சாட்­டு­கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. 

அவற்­றுக்­குப் பயப்­ப­டத் தேவை­யில்லை. தொடர்ந்து குற்­றச்­சாட்­டு­கள் முன்­வைக்­கப்­பட்­டால் அந்த விசா­ர­ணை­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்க வேண்­டி­யது எமது கடமை. 

விசா­ர­ணை­க­ளுக்கு முகம்­கொ­டுக்க நாங்­கள் தயா­ரா­கவே உள்­ளோம். குற்­றங்­களை ஒழித்து மறைத்து வைக்க வேண்­டிய தேவை எமக்­கில்லை. போர்க்­குற்­றங்­கள் நடை­பெ­றா­த­தன் கார­ண­மா­கவே நான் இந்த உறு­தி­மொ­ழி­களை வழங்­கு­கின்­றேன். 

எந்­த­வொரு விசா­ரணை நடைபெற  வேண்­டு­மொ­யி­னும் அதனை அர­சி­யல் தலை­மை­களே தீர்­மா­னிக்க வேண்­டும். எனி­னும் பன்­னாட்­டுத் தலை­யீ­டு­க­ளுக்கு அனு­ம­தி­ய­ளிக்க முடி­யாது. 

 உள்­நாட்­டில் அதற்­கான ஏற்­பா­டு­கள் காணப்­ப­டு­கின்­றன. விசா­ர­ணை­கள் நடை­பெற்­றால் முழு­மை­யான ஆத­ரவு வழங்­கு­வோம். மனி­தப் படு­கொ­லை­யா­ளி­க­ளுக்­கும் இரா­ணு­வத்­தி­ன­ருக்­கும் இடை­யி­லான வேறு­பா­டு­களை அறிந்­து­கொள்ள வேண்­டுமெனத் தெரிவித்துள்ளார்.