Breaking News

“யாழ்.மாநகர சபை”; அரசியல் பித்தலாட்டங்கள் – வித்தகன்

யாழ்ப்பாணம் மாநகர சபையில் எக் கட்சி ஆட்சி செலுத்துவது என்ற விவ காரத்தில் சூடு இன்னமும் தணிய வில்லை. இதற்கிடையே தமிழரசுக் கட்சி – தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பு “இமானுவல் ஆர்னோல்ட்டே முத ல்வர்” என அறிவித்து அந்தச் சூட்டை மேலும் அதிகரிக்கச் செய்தது. ஆர்னோல்ட் முதல்வர் ஆவதில் சொந்தக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகள் பலமாக உள்ளன – இப்போதும்கூட. இத னால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பி னரான சொலமன் சூ சிறிலை முதல்வராக்க கட்சிக்குள் சிலர் முயன்றனர். ஆனால் அவர்களின் முயற்சியை சுமந்திரன் முளையிலேயே கிள்ளிவிட்டார்.

சொலமன் சூ சிறில் 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் பட்டியலில் சிலரை தமிழீழ விடுதலைப் புலிகள் நீக்கியிருந்தனர். ஆனால் சொலமன் சிறிலை அங்கீகரித்திருந்தனர். போட்டியிட்ட அவரால் நேரடியாக தகுதி பெற முடியவில்லை. 

எனினும் சிவநேசன் எம்.பியின் மரணத்தின் பின்னர் அவரின் இடத்துக்கு சிறிலை நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார். 2010 இன் பின்னர் கூட்டமைப்பில் இருந்து மெல்ல மெல்ல ஓரங்கட்டப்பட்டார். இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாநகர முதல்வர் வேட்பாளராகப் சிறிலின் பெயரும் பிரேரிக்கப்பட்டது. 

ஆனால் கூட்டமைப்பின் எல்லாமுமான சுமந்திரன் ஆர்னோல்ட்டே நியமிக்க ப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதனால் போட்டியில் இருந்து சிறில் விலக்கப்பட்டார். தேர்தலில் எந்தக் கட்சியும் பெரும்பான்மையை நிரூ பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. 

ஆட்சி அமைப்பது யார் என்ற பிரச்சினை எழவே அமுங்கிப் போனது மேயர் விவகாரம். மாநகரின் ஆட்சியைக் கைப்பற்ற எந்த நிலைக்கும் இறங்கத் தயாரானது கூட்டமைப்பு. தமிழினத்தையே காட்டிக் கொடுத்து, கூறுபோட்டு விற்ற ஈ.பி.டி.பியிடம் பேரம் பேசல் இடம்பெற்றது. இதை முன்னின்று நடத்தி யவர் சுமந்திரன் எம்.பியே. ஈ.பி.டி.பியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் நல்லூரில் கோவில் வீதியில் உள்ள வீடொன்றில் கூடிப் பேசினர். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணங்க ஈ.பி.டி.பி. இணங்காத நிலையில் எந்தக் கட்சிக்கும் – அதாவது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவளி ப்பதில்லை என்ற உத்தரவாதத்தை சுமந்திரன் தலைமையிலான பேச்சுக்குழு பெற்றுக் கொண்டது. கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதில் பங்கம் ஏற்படாது என்று எண்ணிய சமயத்தில், கூட்டமைப்புக்குள் இருந்த சுமந்திரன் – ஆர்னோல்ட் அதிருப்தியாளர்கள் சந்தர்ப்பத்தை தமக்கு சாதகமாக்கிக் கொள்ள முனைந்தனர். 

அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதானால் வேறு கட்சி களின் ஆதரவு தேவை அல்லது தொங்கு ஆட்சியே நடக்கும் என்பது பட்ட வர்த்தனம். இதனால் ஆர்னோல்ட் வெறுப்பு அலையைப் பயன்படுத்தி அவரை அகற்ற முடியும். இதன்மூலம் சுமந்திரனை தோல்வியுறச் செய்யமுடியும் என்பதாக இருந்தது. 

இதனால் சொலமன் சிறிலை “கொம்பு சீவி விடும்” வேலையில் இருந்தனர். அவர்களின் விவேகமற்ற செயல்களால் உஷாரான சுமந்திரன் தமிழரசுக் கட்சி யின் தலைமையைக் கழற்றி விட்டு தனது சர்வாதிகாரத்தைக் காட்டினார். ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தினார். பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகளையும் அழைத்தவர் “யாழ். மாநகர முதல்வராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக இமானுவேல் ஆர்னோல்ட் நிறுத்தப்படுவார்” என்று அறிவித்தார். 

திடுதிப்பென வெளியான இந்த அறிவிப்பால் சிறில் சற்றுக் குழம்பிப் போனார். பின்பு மார்ட்டின் வீதியிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் “நான் தமிழரசுக் கட்சியால் ஒதுக்கப்படுகிறேன்” எனக் கூறி தனது மன த்தாங்கலை அழுகையாக வெடித்திருந்தார். சுமந்திரன் மீதான அச்சத்தால் பலரும் அமைதி காத்தனர். 

அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் மாத்திரம் அவருக்காக குரல் கொடு த்திருந்தார் என உள்வீட்டுத் தகவல்கள் கூறுகின்றன. இந்த விவகார த்தால் எங்கே ஆர்னோல்ட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் சிறிலை சமரசப்படுத்தும் பணி முடுக்கி விடப்பட்டது. இந்தச் சமரசத்தின் பின்னர் “கட்சியின் முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன்” என்ற அறிக்கையை விட்டி ருந்தார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட இந்தக் குழப்பத்தைப் பயன்ப டுத்தி யாழ். மாநகர சபையின் ஆட்சியைக் கைப்பற்றக் காய் நகர்த்தியது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி. தேர்தலுக்கு முன்பாக ஆதரவு அலை அதி கரித்தாலும் வட்டாரத்தில் – அதுவும் யாழ். மாநகர சபையில் வெற்றி கிடை க்குமா என்பதையும் – அப்படியே கிடைத்தாலும் எந்த வட்டாரத்தில் வெற்றி கிடைக்கும் என்பதையும் முன்னணியினரால் சரியாகக் கணிக்க முடிய வில்லை. 

இதனாலேயே அக்கட்சியின் தேசிய அமைப்பாளரான வி.மணிவண்ணன் வட்டாரத்தில் இறங்கவில்லை – இறக்கப்படவில்லை. ஆனால் வட்டாரத்தில் ஆசனங்கள் கிடைக்காவிட்டாலும் விகிதாசாரம் மூலம் கிடைத்துவிடும் என்ப தில் முன்னணி நம்பிக்கை கொண்டிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதான அதிருப்தி “ஏக கட்சி” என்ற மனநிலையில் இருந்த மக்களில் கணிசமா னோரை அசைத்திருந்தது. 

ஒரு சாரார் வாக்கை செலுத்தாமல் விட்டனர் – சுமார் 15 ஆயிரம் பேர் வாக்க ளித்திருக்கவில்லை. (வழமையாக வாக்களிக்காத கூட்டத்தினரும் இதற்குள் அடக்கம்) வாக்கு அளித்தே தீர வேண்டும் என்றவர்களும் – தமிழ்த் தேசியக் கொள்கைக்கே வாக்கு என்றவர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களித்திருந்தனர். 

மீதமானவர்களே ஈ.பி.டி.பிக்கும் தேசிய கட்சிகளுக்கும் ஏனையோருக்கும் வாக்களித்திருந்தனர். விகிதாசார கலப்புத் தேர்தல் என்பதால் அதிக வாக்குகள் பெறும் கட்சிக்கு விகிதாசார உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும். இந்த சந்தர்ப்பம்தான் யாழ். மாநகர சபையில் சிக்கலை உருவாக்கியிருக்கிறது. சில உறுப்பினர்கள் கிடைத்தால் போதும் என்ற நினைப்பில் இருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, கூட்டமைப்புக்கு அடுத்தபடியாக யாழ்ப்பாணத்தில் அதிக இடங்களில் கூடுதலான ஆசனங்களைக் கைப்பற்றியது. 

உள்ளூராட்சி சபைகளில் வடக்கில் அதி கவனம் பெறுவது யாழ். மாநகர சபை மட்டும்தான். இதனால் அங்கு ஆட்சியை எவரும் அமைக்க முடியா நிலை தோன்றியதால், ஆரம்பத்தில் விலகி இருக்கும் நிலைப்பாட்டில் இருந்த முன்னணியினர், அதைக் கைவிட்டு ஆட்சி உரிமைப் போட்டிக்குள் அடியெ டுத்து வைத்தனர். 

இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முட்டாள்தனமான நடவடிக்கையும் காரணமாக அமைந்தது. கட்சிக்குள்ளும் – வெளியிலும் பெரும்பாலானவர்க ளுக்குப் பிடிக்காத ஆர்னோல்ட்டே மேயர் என்பதில் அது உறுதியாக இருப்பதே போட்டிக்கு வித்திட்டது. இதற்காக எப்போதுமே சேர முடியாத ஈ.பி.டி.பியின் தயவைக்கூட பெற கூட்டமைப்பு தயாராக இருந்தது. 

கூட்டமைப்புக்கு வெளியில் இருந்து ஆதரவு எனத் தெரிவித்த ஈ.பி.டி.பி. கூட்ட மைப்பை அசைக்கும் விதமாக ஆர்னோல்ட் மேயர் என்றால் ஆதரிக்க மாட்டோம் என இப்போது அறிவித்துள்ளது. இது தமிழ்த் தேசிய மக்கள் முன்ன ணிக்கு வாய்ப்பாகவே, சந்தர்ப்பத்தை வசமாக்க திரைமறைவில் காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்கும் என்ப தால் தனக்கான எதிரப்பை சட்டை செய்யவில்லை. ஆனால், கட்சிக்கு ள்ளேயே எதிர்ப்புகள் மெல்லமெல்லக் கிளம்பியிருப்பதன் ஆபத்து இனித்தான் வெளிப்படும். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் தொடங்கியுள்ள இந்த ஏட்டிக்குப் போட்டி அரசியல் கடந்த காலத்தில் உள்ளூ ராட்சி சபைகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் நாற டித்ததை விட மோசமாக்கி விடும். இரு கட்சிகளும் ஆற அமர சிந்தித்து தமிழ்த் தேசியத்தின் பெயரால் இரு கட்சிகளுக்கும் வாக்களித்த மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் – இதுவே காலத்தின் கடப்பாடும் – இன்றைய தேவையும்.