Breaking News

பிர­த­ம­ருடன் எவ்வித தொடர்பும் இல்லை.!

தேசிய அர­சாங்­கத்தில் நீடித்­தாலும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுடன் ஸ்ரீல ங்கா சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்­களும் அமைச்­சர்­களும் எவ்­வி­த­மான தொடர்­பு­க­ளையும் வைக்­கப்­போ­வ­தில்லை என தெரி­வித்த அமைச்சர் விஜித் விஜே­முணி சொய்சா தவ­று­களை திருத்­திக்­கொண்டு பய­ணிக்கவுள்ளதாக தெரிவி த்துள்ளார்.  

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க ஆகி­யோரின் தலை­மையில் தேசிய அர­சாங்­கத்தின் அமைச்­ச­ரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. 

ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை முற்­பகல் இடம்­பெற்ற இந்த கூட்­டத்தில் கலந்­து­ கொண்­டதன் பின் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அமைச்சர் விஜித் விஜே­முணி சொய்சா மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

மேலும் கூறுகையில்...... , 

வழ­மை­யான அமைச்­ச­ரவை கூட்­டமே இன்று (நேற்று) இடம்­பெற்­றது. தேசிய அர­சாங்­கத்தின் நெருக்­க­டிகள் குறித்து எதுவும் பேச­வில்லை. ஆனால் அவ்­வா­றா­ன­தொரு நெருக்­க­டி­யான சூழல் அர­சாங்­கத்­திற்குள் காணப்­பட்­டதை அனை­வரும் அறி­வீர்கள். சுமூ­க­மாக அனைத்து பிரச்­சி­னை­க­ளையும் தீர்த்துக் கொண்டு பய­ணிக்க வேண்டும் என்­பதே ஜனா­தி­ப­தியின் நிலைப்­பா­டாக உள்­ளது. 

இத­ன­டிப்­ப­டையில் இணக்­கப்­பா­டு­க­ளுடன் தேசிய அர­சாங்­கத்தை தொடர்ந்தும் முன்­னெ­டுப்போம். இதற்­காக ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் அனைத்து விட­யங்­க­ளிலும் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டுவோம் என்­றில்லை. அதேபோன்று தேசிய அர­சாங்கம் என்­றாலும் பிர­த­ம­ருடன் எவ்­வி­த­மான தொடர்­பு­க­ளையும் ஸ்ரீல ங்கா சுதந்­திர கட்சி மேற்­கொள்­ளாது. 

ஜனா­தி­ப­தி­யுடன் ஒன்­றி­ணைந்­தே பய­ணிக்க உள்ளோம். நடைபெற்று முடிந்த உள்­ளு­ராட்­சி­மன்ற தேர்­தலில் மக்கள் எமது கண்ணங்களில் அறைந்­துள்­ளனர். எனவே மீண்டும் தவ­றிழைக்காது புதிய வழியில் தவ­று­களை திருத்திய மைத்துக் கொண்டு பயணிக்க வேண்டும்.

பொது மக்­களின் தேவைகள் மற்றும் நலன்கள் மீது கவ­னத்­துடன் செயற்­பட வேண்டும். வறு­மையான மக்­க­ளுக்கு நிவா­ரண உத­வி­களை வழங்கி அந்த மக்­களின் வாழ்­வா­தா­ரத்தை கட்டியெழுப்ப சுதந்திர கட்சி பாடுபடும். மேலும் கிரா மங்களின் அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கி செயற்பட வேண்டும். இத னையே ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன வலியுறுத்தியதாக தெரிவித்தாா்.