Breaking News

முல்லைத்தீவில் அச்சம்: இராணுவமும் விசேட அதிரடிப்படையினரும் குவிப்பு!

முல்லைத்தீவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உடைமைகளுடன் பொலி ஸாரிடம் இருவா் சிக்கியதுடன் தப்பிச் சென்ற சந்தேக நபரை ஸ்ரீ லங்கா பாதுகாப்புப் பிரிவு தீவிரமாகத் தேடிவருகிறது.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராறு பகுதியில் இன்று காலை வீதி பாது காப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் முச்சக்கர வண்டி ஒன்றை மறித்து சோதனையிட்டுள்ளனா்.

இதன்போது விடுதலைப் புலிகளின் கொடி, சீருடை மற்றும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து முச்சக்கர வண்டி சாரதி உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனா்.

மேலும் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்ய ப்பட்ட இருவரும் பொலிஸ் நிலையம் அழைத்து வரப்பட்டு விசார ணைகளை பொலிசார் முன்னெடுத்துவரும் அதேவேளை இராணுவம் மற்றும் புலனாய் வாளர்கள் என பலர் பொலிஸ் நிலையத்தில் குவிக்கப்பட்டுள்ளனா்.

பொலிஸ் மற்றும் இராணுவம் இணைந்து தப்பியோடியவரை கைது செய்வ தற்கான தேடுதல் நடவடிக்கைகளை காட்டில் மேற்கொள்வதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதேவேளை சம்பவத்துடன் தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தில் புதுக்குடி யிருப்பு தேவிபுரம் பகுதியில் மேலுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவியுள்ளன.

இந்த நபரும் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முல்லைத்தீவு மற்றும் நெடுங்கேணி பகுதிகளில் பல்வேறு இடங்களில் இரா ணுவம், பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து தேடுதல் மேற்கொண்டு வருவதுடன் இச் சம்பவம் மக்கள் மற்றும் முன்னாள் போரா ளிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்க முடி கின்றது.