Breaking News

விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்க ஈழ உறவுகள் தொடர்ந்து போராட வேண்டும்!

உலகம் முழுவதும் வாழ்கிற ஈழ உறவுகள் விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்க அந்த அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தொடர்ந்து போராட வேண்டுமென இயக்குனர் சோழன் மு.களஞ்சியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கமல்ல, அது ஒரு தேசிய இன விடுதலைக்காக போராடிய இயக்கம் என்று சுவிட்சர் லாந்து நீதிமன்றம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்துள்ளது.

அது குறித்த ஒரு கலந்துரையாடலை தமிழர் நலம் பேரியக்கத்தின் சார்பில் இயக்குனர் சோழன் மு.களஞ்சியம் நேற்று மாலை சென்னையில் ஒருங்கிணைத்து நடத்தினார்.

நிகழ்வில் பல்வேறு இயக்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்தனர். நிகழ்வில் நிறைவுரையாற்றிய சோழன் மு.களஞ்சி யம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளாா். 

 ''உலகம் முழுவதும் வாழ்கிற ஈழ உறவுகள் விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்க அந்த அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தொடர்ந்து போராட வேண்டும். கடந்த 2011-ல் 'சட்டத்துக்கு புறம்பான நிதி சேகரிப்பு' என்கிற குற்றசாட்டில் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்தது சுவிட்சர்லாந்து அரசு. சுவிட்சர்லாந்து வரலாற்றிலேயே இப்படி ஒரு வழக்கு நடந்ததே இல்லை.

புலம் பெயர்ந்து வாழ்கிற தமிழர்களின் மூலமாக தாயகத்துக்கு பொருளாதார உதவிகள் வந்து விடக் கூடாது என்பது தான் இலங்கையின் நட்பு நாடுகளின் பாரிய திட்டம்.

ஆகவே, புலம்பெயர்ந்து வாழ்கிற ஈழ மக்களிடையே ஒரு அச்சுறுத்தலையும், குழப்பத்தையும் ஏற்படுத்தவே இந்த வழக்கை தொடுத்தனர். விடுதலைப் புலி கள் அமைப்பின் மீது தேவை இல்லாத குற்றசாட்டுகளை முன் வைத்து தடை செய்தனர்.

2016இல் வழக்கின் பெயரை 'பயங்கரவாதத்துக்கான நிதி சேகரிப்பு' என்று மாறி னார்கள். ஆனால், சுவிட்சர்லாந்து நாட்டில் வாழ்கிற ஈழ உறவுகளின் அயராத சட்டப் போராட்டத்தால் இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதோடு, புலிகள் இயக்கம் 'ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடுகின்ற இயக்கம்' என்கிற அறிவிப்பையும் விடுத்துள்ளது.

இது முற்றிலும் சுவிட்சர்லாந்து நாட்டில் வாழ்கிற ஈழ மக்களின் வெற்றி. அவர் களை நான் சார்ந்திருக்கும் தமிழர் நலம் பேரியக்கத்தின் சார்பில் மனதார வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன்." என்றார்.

மேலும் 2009இல் உலகம் கூடி இனப்படுகொலை செய்து அழித்தது புலிகளை யும், அப்பாவி ஈழ மக்களையும் மட்டுமல்ல என்று கூறிய அவர், புலிகள் கட் டமைத்த அரசையும் தான் என சுட்டிக்காட்டியுள்ளாா்.

தமிழீழ விடுதலைப் புலிகள் வெறுமனே ஆயுதம் தரித்து போராட வில்லை என்று தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், "இலங்கை அரசின் கட்டுப் பாட்டிலிருந்து தமிழீழம் மீட்கப்பட்டு, ஒரு இறையாண்மை உள்ள அரசை தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் கட்டமைத்து செயற்பட்டார் கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது பெண்கள் படைப்பிரிவு, மற்றும் கரும்புலி விசேட படைப்பிரிவு ஆகியவற்றைக் கொண்ட நேர்த்தியான இரா ணுவம். முப்படைகளும் வலுவாக கட்டமைக்கப் பட்டு மரபுவழிப் போர் புரிந் தவர்கள்.

ஒரு இடத்தில் கூட உலக போர் மரபை மீறாமல் செயல்பட்டவர்கள். ஆகவே, எல்லா போர் மரபுகளையும் மீறி, தமிழீழ மக்களை இனப்படுகொலை செய்தது இலங்கை அரசு. இனப்படுகொலை குற்றவாளியான இலங்கை அரசுக்கு ஆதர வாக, புலிகள் இயக்கத்தின் மீதான தடை விதித்த நாடுகள், வரலாற்று ஆய்வு, அரசியல் ஆய்வுகளை நேர்மையான முறையிலே மேற்கொண்டு தங்களது முடிவுகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.

உலகம் முழுவதும் தழிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தூய்மையான விடுதலை இயக்கம் என்பது நிறுபணமாகி விட்டால், தடையை நீக்காத நாடு களுக்கு அவமானம் ஏற்படும்.

அந்த நிலை ஏற்படுத்த உலகம் முழுவதும் வாழ்கிற தமிழர்கள் ஒருங்கிணை ந்து போராட வேண்டும். குறிப்பாக, இந்திய அரசு தனது நிலைபாட்டை மாற்றிக் கொள்ள வில்லை என்றால் உலக அரங்கத்தில் தலை குனிந்து நிற்க வேண்டிய அவலம் ஏற்படுமென எச்சரிக்கை விடுக்கிறேன்." என சோழன் மு.களஞ்சியம் உரையாற்றியுள்ளாா்.