Breaking News

கண்ணீர் சிந்தும் கன்னி மேரியின் வெண்கல சிலை!

அமெரிக்கா - நியூ மெக்சிகோவில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் கன்னி மேரியின் வெண்கல சிலையின் கண்களில் இருந்து கண்ணீர் போல் ஒலிவ் எண்ணெய் போன்ற ஒரு திரவம் வடிந்தோடிக்கொண்டிருக்கின்றது. 

7 அடி உயரமான கன்னி மேரியின் வெண்கல சிலை உள்ளூர் மொழியில் குவாடலூப் எமது லேடி என அழைக் கப்படுகிறது. இச் சம்பவம் குறித்து ரோமன் கத்தோலிக்க மறைமாவட்ட துப்பறிவாளர் லாஸ் க்ரூசஸ், "அதில் இருந்து வரும் கண்ணீர் ஒலிவ் எண்ணெய் போல் உள்ளது. 

அதனை இரசாயன சோதனைக்கு உட்படுத்த வேண்டும். இது புனித பொருளாக கருதப்படுகிறது. இப் புனித எண்ணெய் திருச்சபை இறை வணக்கத்தில் ஈடுபடு பவர்களுக்கு புனித எண்ணெயாக பயன்படுத்தப்படுகிறது." என கூறியுள்ளார். 

திருச்சபைத் தலைவர்கள், "இந்த அரிதான நிகழ்வை காண அனைத்து மக்க ளும் மாறி மாறி வரும்படி தூண்டியுள்ளது. ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் தேவனுடைய தாயின் சிலை அழுவதாக பார்க்கிறார்கள்" 

ஆனால் இதற்கான விளக்கத்தை அவர்களால் கூற முடியவில்லை. குறித்த கத்தோலிக்க தேவாலயம் இயற்கைக்கு புறம்பான அறிகுறிகளை நம்புவதற்கு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. 2015 இல் வத்திக்கான் புரொபசீஸ் என்ற புத்தகத்தை எழுதிய ஜான் தவாஸ், "கடவுள் நம் சொந்த உலகில் செயல்படும் மரபு சார்ந்த நம்பிக்கையை உறுதிப்படுத்துவதோடு, 

சில நேரங்களில் இயற்கைக்கு அப்பாற்பட்டவராகவும் நம் உலகில் காணப்படு வதால். இதுபோன்ற ஏதோவொரு ஆர்வமும் உற்சாகமும் ஏற்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.