Breaking News

பண மோசடி செய்த இராணுவ வீரர் கைது.!

வவுனியாவில் உள்ள அரச வங்கியொன்றின் தன்னியக்க இயந்திரத்தில் பிறி தொருவருடைய ஏ.ரி.எம். அட்டையை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட இராணுவ வீரர் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இச் சம்பவமானது நேற்றிரவு 9 மணி யளவில் நடைபெற்றுள்ளதுடன்  முல்லைத்தீவு பகுதியிலுள்ள இரா ணுவ முகாமொன்றில் கடமையாற் றும் 41 என்ற இராணுவ வீரரே கைதா கியுள்ளார். 

 மேலும் தெரியவருகையில், 

குறித்த இராணுவ வீரர் வவுனியா நகரிலுள்ள பழைய பேருந்து தரப்பிடத்தில் நின்று அங்கு வந்த பெண்ணொருவிடம் ஏ.டி.எம். அட்டையை கொடுத்து பணம் பெற்றுத் தருமாறு கோரியுள்ளார். இதற்கிணங்க அப் பெண் ஏ.டி.எம். அட் டையை வங்கியொன்றில் செலுத்தி இரண்டு தடவை பணம் எடுத்துள்ளார். 

இதனையடுத்து ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுக்க வந்த நபர் ஒருவரிடம் அப் பணத்‍தை சரிபார்க்க கொடுத்தபோது குறித்த பெண் வைத்திருந்த ஏ.டீ.எம் அட்டைக்கும் பெண்ணுக்கும் சம்பந்தம் இல்லாமையினால் வங்கியில் காவல் கடமையிலிருந்த காவலாளிக்கு தெரியப்படுத்தியதையடுத்து அப் பெண்ணி டம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

அப் பெண் இராணுவ வீரரை இனங்காட்டியட்டியதுடன், அவர் தந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இராணுவ வீரரிடம் விசாரணை மேற் கொண்ட போது அவர் குதர்க்கமாக பதிலளித்ததுடன் அங்கிருந்து தப்பித்து ஓடி யுள்ளார். 

அவரை மடக்கிப் பிடித்த பிரதேச வாசிகள் அவரிடம் விசாரணை தொடுத்த போது அவர் பயன்படுத்திய ஏ.டி.எம். அட்டை பிறிதொருவருடையதென தெரி வாகியுள்ளதையடுத்து அவரை கைதுசெய்த வவுனியா பொலிஸார் அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனா்.