Breaking News

கந்தகப்பொறியில் சிக்கிய 4-4 பிராவோவும்! செல்லக்கிளியை தேடிய கிட்டுவும் !!-

சரத்முனசிங்கா வழங்கிய பதற்றமான செய்திகளின் அடிப்படையில் நள்ளிர வுக்கு முன்னர் மீண்டும் மாதகல் முகாமை அடைய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது 4-4 பிராவோ அணி. 

இதனால் தனது சுற்றுக்காவலின் தூரத்தை சுருக்கிய அந்தஅணி குரு நகர் முகாமில் இருந்து இரவு பத்து மணிக்குப்பின்னர் புறப்பட்டது. முத லில் 4-4 பிராவோ அணி யாழ். நகரச் சந்தை மற்றும் நாகவிகாரை ஊடான சுற்று காவல் பணியை செய்தது. 

அதன்பின்னர் பின்னர் நல்லூர்-கோப் பாய் ஊடாக உரும்பிராய்க்கு சென்றது. ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது போலவே ஐந்து நிமிடங்களுக்கு ஒரு தடவை தமது பயணம் குறித்த தகவல் களையும் குருநகர் முகாமுக்கு வழங்கிக் கொண்டிருந்தது 4-4 பிராவோ. 

தாம் சென்ற வழியில் எந்தவிதமான அசாதாரண நிலைகளையும் 4-4 பிரா வோவின் பொறுப்பாளர் வாஸ் குண வர்த்தனாவால், அவதானிக்க முடிய வில்லை. நாய்கள் குரைத்த ஓசையை தவிர பொதுவாக நிசப்தத் தில் வீதிகள். உறைந்து கிடந்தன. 

வீதியோர மின்குமிழ்கள் மட்டும் அழுது வடிந்து கொண்டிருந்தன. உரும்பிரா யில் சிறிதுநேரம் தனது அணியுடன் தரித்து நின்ற வாஸ்குணவர்த்தனா இரவு 11. 28 அளவில் தனது ரேடியோ தொடர்பாடல் கருவியை எடுத்து மீண்டும் குரு நகர் முகாமை தொடர்பு கொண்டு பேசினார். 

தமது 4-4 பிராவோ சுற்றுக்காவல் நடத்திய சென்ற அனைத்து இடங்களிலும் நிலைமை வழமையாக இருப்பதாக அறிக்கையிட்டார். அத்துடன் ஏற்கனவே திட்டமிட்டதை போலவே நள்ளிரவுக்கு முன்னர் தாம் மீண்டும் மாதகல் முகா முக்கு திரும்ப உள்ளதாகவும் வாஸ்குணவர்த்தனா குறிப்பிட்டார். 

ஆனால் தனது மீண்டும் மாதகலுக்குதிரும்ப முடிவுசெய்த அதே மார்கத்தில் தான் செல்லக்கிளி எக்ஸ்புளோடரில் தனது கரங்களை வைத்து காத்திருப் பதோ அல்லது தலைவர் பிரபாகரன் உட்பட்ட விடுதலைப்புலிகளின மூத்த உறுப்பினர்கள் பலரும் வீதியின் இரண்டு பக்கங்களிலும் தமக்காக காத்தி ருப்பதோ அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.

வாஸ்குணவர்தனா தெரிவுசெய்த அந்தவழித்தடம் கோண்டாவில்-கொக்கு வில்- திருநெல்வேலி ஊடான மார்க்கம். தமது அணி மீதான தாக்குதலை சாக்காக வைத்து இலங்கைத்தீவும் இன்னும்; சில மணிநேரத்தில் பெரும்வன் முறைக்களமாக மாறப்போகும் நிலையை கூட 4-4 பிராவோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

அந்த அணி இப்போது கோண்டாவிலை கடந்து திருநெல்வேலியால் பயணி த்து கொண்டிருந்தது. நிமிடங்கள் கரைந்து அதற்குரிய மரணக்கணங்கள் நெருங்கின. 4-4பிராவோ அணியில் முதலாவதாக வந்த வாகனத்தின் ஹெட் லைற் வெளிச்சமும் வாகனத்தின் ஓசையும் வீடொன்றின் மேலேயிருந்த செல்லக்கிளி விக்டர் ஆகியோரின் புலன்களை சுறு சுறுப்பாக்கின. 

செல்லக்கிளி தனது கரங்களுக்கிடையில் இருந்த எக்ஸ்புளொடரை இன்னும் இறுக்கமாக பற்றிப் பிடித்தார். 4-4பிராவோஅணி நெருங்கியது. புலிகளின் அணி யில் நடவடிக்கைக்கு தயாராவதை அறிவிக்கும் வகையில் சிறிய சீக்கா யொலி சத்தம் ஒன்று பிறந்தது. 

வீதியின் இரண்டு பக்கங்களிலும் நிலையெடுத்துக் காத்திருந்த தலைவர் பிரபாகரன் உட்பட அனைத்துப்  போராளிகளும் உசாரடைந்தனர். 4-4 பிராவோ அணி தனக்கு வைக்கப்பட்ட கந்தகப்பொறியை மிக நெருக்கமாகி விட்டது. மிகச்சரியான தருணமொன்று தனக்கு முன்னால் உருவாகியிருப்பதை செல்லக்கிளி மிக துல்லியமாக உணர்ந்து கொண்டார். 

அவரது கரம் எக்ஸ்புளொடரின் செயலியில் அழுத்தியது. யாழ்குடாநாடே அதிரும் ஓசையுடன் 2 கண்ணிவெடிகளும் தீப்பிழம்புடன் வெடித்து சிதறின. யாழ்குடாவாசிகள் தமது வாழ்வில் கேட்ட பாரிய வெடியோசை இது. 

முதலாவது கண்ணிவெடியில் சிக்கிய ஐPப் ஏறக்குறைய ஒரு தென்னை மரத் தின் உயரத்திற்கு எழும்பி சிதிலப்பட்டு மீண்டும் வீதியில் வீழ்ந்தது. இரண் டாவது கண்ணிவெடி பின்னால் வந்த றக் வண்டியின் முன்பகுதியை இலக்கு வைத்து வெடித்தது. 

ஐPப் வண்டியில் பயணித்த அனைவருமே உடலங்களாக வீதி மருங்கில் தூக்கி வீசப்பட்டனர். எங்கும் தூசுமண்டலம். சாரதி மனதுங்க மற்றும் அணிப் பொறுப் பாளர் வாஸ்குணவர்த்தனா ஆகியோரின் உடலங்கள் பாளங்களாக சிதறிய வீதியின் ஓரங்களில் கிடந்தன. 

கண்ணிவெடிகள் வெடித்தபின்னர் இதற்கெனவே காத்திருந்த புலிகளின்; துப்பாக்கிகள் றக் வண்டியை இலக்குவைத்து சடசடத்தன. பிரபாகரனின் ஜி-3 யும் ரவைகளை உமிழ்ந்தது துருப்புக்காவி வாகனத்தில் தப்பியிருந்த இருந்த படையினரும் பதிலுக்கு வேட்டுகளைத் தீர்த்து ஒய்ந்தனர். 

ஆம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றில் முதன் முறையாக ஒரே தடவையில் அதிக எண்ணிக்கையில் சிறிலங்கா படையினர் கொல்லப் பட்ட சம்பவம் பதிவாகிவிட்டது. 

திருநெல்வேலியில் வெடித்த கண்ணிவெடிகளின் பாரிய ஓசை குருநகர் முகா முக்கும் எட்டியது. இரவு உணவை முடித்து தனது அறைக்கு திரும்பிய சரத் முனசிங்கவுக்கு இந்த வெடியோசையை கேட்டதும் அவரது மூளை ஏதோ பிழை நடந்துவிட்டதென்பதை உணர்த்தியது. 

இந்த நிலையில் அவரது அறைக்கதவை யாரோ தட்டியதும் அவர் இன்னும் பரபரப்பானார். ஏறக்குறைய சரத்முனசிங்க கொண்டிருந்த ஊகத்தை போலவே பிரிகேடியர் பல்தசாருக்கும் ஊகம் ஏற்பட்டதால் உடனடியாகவே சரத்முன சிங்கவின் அறைக்கு சென்று கதவைத்தட்டிய அவர் உடனடியாக சரத்முன சிங்காவை வெளியே வருமாறு அழைத்தார். 

பிரிகேடியர் அழைப்பதைக்கேட்டு அறைக்கு பரபரப்பாக வெளியே வந்தார் சரத் முனசிங்க. இருவரும் உடனடியாகவே வானொலிதொலைத்தொடர்பு சாதனங் கள் வைக்கப்பட்டிருந்த கொமினிக்கேசன் அறையை நோக்கி ஓடி அவற்றை இயக்கி 4-4 பிராவோவுடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிசெய்தனர் ஆனால் 4-4 பிராவோவுக்குரிய மறுமுனையோ செயலற்றுக்கிடந்தது. 

கம’திக்கத்தி அழைத்தும் பலனில்லை. ஏதோ ஒரு பெரும்சிக்கல் ஏற்பட்டு விட்டதென்பது மட்டும் அவர்களுக்குப் புரிந்தது என்ன செய்வது? நேரமோ நள்ளிரவு வேறு வழியில்லை 4-4 பிராவோ வந்த வழியாக சென்று பார்க்க வேண்டியதுதான் என முடிவு எடுத்தனர். 

ஆனால் இடை வழியில் புலிகள் தாக்கினால் என்னசெய்வது, உடனடியாக குருநகர் முகாமை உசார்படுத்திய பிரிகேடியர் பல்தசார் இரண்டு மூன்று வாக னங்களில் படையினரை பின் தொடருமாறு பணித்துவிட்டு சரத்முனசிங்கா வின் ஜீப் முன் ஆசனத்தில் தாவி ஏறினார். 

யாழ் பலாலிவீதியூடாக திருநெல்வேலிப்பக்கமாக கடும்வேகத்துடன் சீறிக் கொண்டு சென்றது சரத்முனசிங்கா செலுத்திய வாகனம். அவரது வாகனத் துக்கு ஈடுகொடுத்தபடியே ஏனைய ராணுவ வாகனங்கள் தொடர்ந்தன.

இந்தநிலையில் தாக்குதல் நடந்த இடத்தில் புலிகளின் அணி மிகதுரிதமாக இயங்கியது. கொல்லப்பட்ட படையினரிடமிருந்த ஆயுதங்களை அவர்கள் விரைவாக சேகரித்துக்கொண்டிருந்த போது கிட்டுவுக்கு மட்டும் திடிரென ஒரு பொறிதட்டியது. 

தன்னை மறந்த நிலையில் ஒரு வினாவை உரத்து எழுப்பினார். செல்லக்கிளி அண்ணை எங்கே? கிட்டு உரத்து எழுப்பிய அந்தவினா தலைவர் பிரபாகரன் உட்பட அனைவரினதும் காதுகளை தாக்கியது.  

ஆம்… செல்லக்கிளி எங்கே? 

 தடங்கள் தொடரும்….

- நன்றி ஐ.பி.சி இணையத்திற்கு-