Breaking News

எமது பிரச்சினைகளை நாமே தீர்ப்போம் - ஐ.நா.வில் மைத்திரி

எங்கள் பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக் கொள்ள விடுங்கள். இதில் சர்வ தேச நாடுகள் தலையிடாதீா்கள் என ஜனாதிபதி மைத்திரிபா சிறிசேன ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச் சபை அமர்பில் தெரிவித்துள்ளாா். 

ஐக்கிய நாடுகள் அமைப்பின் 73 ஆவது பொதுச்சபை கூட்டத் தொடரின் பிர தான அமர்வு இலங்கை நேற்று பிற்பகல் நியூயோர்க் நகரிலுள்ள ஐ. நா. தலை மையகத்தில் நடைபெற்றுள்ளது.

உலகம் எதிர்பார்த்துள்ள ஐக்கிய நாடு கள் சபையின் இவ்வருட பொதுச்சபை கூட்டத்தொடர் “ஐக்கிய நாடுகள் சபையை சகல மக்களுக்கும் அணுகச் செய் தல், நீதியும் அமைதியும் பேண்தகு தன்மையும் கொண்ட சமூகத்திற்கான உலகளாவிய தலைமைத்துவத்தின் ஒன்றிணைந்த பொறுப்பு” எனும் தொனிப் பொருளில் நடைபெற்றுள்ளது.

இப் பிரதான அமர்வில் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள் ளிட்ட சர்வதேச நாடுகளின் அரச தலைவர்களுடன், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் கலந்து சிறப்பித்துள்ளாா்.

அமைச்சர்கள் பாட்டலி சம்பிக்க ரணவக்க, திலக் மாரப்பன, ராஜித்த சேனா ரத்ன, மனோ கணேசன் ஆகியோரும் இவ் அமர்வில் கலந்து சிறப்பித்துள்ள னா்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இலங்கை இறைமையுள்ள ஒரு நாடாகும். அதனால் சர்வதேச தலையீடுகளுக்கு அவசியம் இல்லை. தமது பிரச்சினைகளை தாமே தீர்த்துக் கொள்வதற்கு இலங்கை மக்களுக்கு உள்ள உரிமையை வழங்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்.

மேலும் இலங்கையில் ஜனநாயகம், ஊடக சுதந்திரம், தேசிய நல்லிணக்கம், மனித உரிமைகள் என்பவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக ஜனா திபதி தெரிவித்துள்ளாா்.