Breaking News

ஏழு தமிழர் விடுதலை குறித்த ; 'பகீர்' முடிவில் உள்துறை அமைச்சகம்.!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவிக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்குமாறு ஆளுநருக்கு தமிழக அமைச் சரவை கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பரிந்துரைத்துள்ளது.

இதையடுத்து, பேரறிவாளன் உள்ளி ட்ட ஏழுபேரும் எப்போது விடுவிக்கப் படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உலக முழுவதுமுள்ள தமிழர்கள் மத்தியில் எழுந் துள்ளது. 

அரசின் பரிந்துரையை தொடர்ந்து பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை  முன் கூட்டி விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசின் ஆலோசனையை கோரி யுள்ளார் ஆளுநர். 

இந்த நிலையில், மத்தியில் ஆட்சியுள்ள பாஜகவின் தமிழக பிரமுகர் ஒரு வரிடத்தில் நாம் பேசினோம். அப்போது அவர் தெரிவித்ததாவது, " சட்டத்தின் அடிப்படையில் பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுவிக்கப்படுவார்களேயானால் அது குறித்து எமக்கு எந்த கருத்தும் இல்லை. 

ஆனால், இந்திய இறையாண்மைக்கு சவால் விடுகிற வகையில் திட்டமிட்டு இந்திய இளம் தலைவர்களுள் ஒருவரும், முன்னாள் பிரதமருமான ராஜீவை கொன்றவர்களை, கொல்ல துணை போனவர்களை விடுவிப்பதனை எங்கள் கட்சி ஏற்காது." என தெரிவித்தார். 

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக உள்துறை அமைச்சகம் விடுத்திருந்த அறிக்கையில் ராஜீவ் கொலையாளி களை விடுவிப்பது தவறான முன்னுதாரணமாகிவிடும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

ராஜீவ் கொலை வழக்கினை தேசத்தின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவா லாக நடுவண் அரசு கருதுகிற காரணத்தினால், ஆளும் தரப்பின் கருத்துக்களே உள்துறை அமைச்சகத்தின் கருத்துக்களாக வெளிப்படுவதற்கான வாய்ப்பு களே அதிகம் என்ற காரணத்தினால் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரின்  விடுதலை தள்ளிப் போவதற்கான வாய்ப்புகளே அதிகமென பாஜக பிரமுகர் தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, ஏழுபோ் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் சிறந்த முடிவெடுப் பாரென அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளாா்.