Breaking News

பொருளாதார சிக்கல்களை தீா்க்கும் முகமாக ஜனாதிபதி தலைமையில் சந்திப்பு.!

உலக சந்தையில் நிலவும் நிச்சயமற்ற விலை காரணமாக தற்போது இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார சவால்களுக்கு தீர்வாக இறக்கு மதியை கட்டுப்படுத்தக்கூடிய பொருட்களை கண்டறிந்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதியமை ச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் தலைமையில் நேற்று முற்பகல் ஜனாதிபதிஅலு வல கத்தில் தேசிய பொருளாதார சபை ஒன்று கூடியபோதே ஜனாதிபதி இவ் வாறு தெரிவித்துள்ளாா்.

சர்வதேச சந்தையில் டொலரின் பெறு மதி அதிகரித்ததன் காரணமாக ஏற்பட் டுள்ள பொருளாதார சவால்களை எதிர்நோக்குவதற்காக இலங்கை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இச் சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை தற்காலிகமாக மட்டுப் படுத்தி உள்நாட்டிலேயே அவற்றின் உற்பத்தியை ஊக்கப்படுத்துவதற்கான நட வடிக்கைகள் தொடர்பாக தேசிய பொருளாதார சபையில் விசேடமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. .

தற்போது இலங்கையில் இறக்குமதி செய்யும் பொருட்களில் அத்தியாவசிய பொருட்கள் அல்லாத பொருட்கள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள எல்லை களை இற்றைப்படுத்தி, சுற்றாடல் ரீதியிலும் தேசிய கைத்தொழிலுக்கும் தாக் கம் செலுத்தும் பொலித்தீன் இறக்குமதியை கட்டுப்படுத்துவது தொடர்பாக வும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அத்தியாவசிய பொருட்கள் அல்லாத பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலமும் இறக்குமதிப் பொருட்களுக்கு உரியவாறு சுங்க வரியை அறவிடுவதன் ஊடாகவும் நாட்டின் விற்பனை மீதியின் பற்றாக் குறையை நிவர்த்திக்க முடியுமென ஜனாதிபதி தேசிய பொருளாதார சபையில் தெரிவித்துள்ளாா்.

உள்நாட்டு வர்த்தகர்களும் உற்பத்தியாளர்களும் எதிர்நோக்கியுள்ள பிரச்சி னைகள் தொடர்பாகவும் இன்று தேசிய பொருளாதார சபை கவனம் செலுத் தியுள்ளது.

சீனி இறக்குமதியாளர்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர் பாக கவனம் செலுத்தப்பட்டதுடன், தற்போதைய கட்டுப்பாட்டு விலைக்கு சீனியை வழங்குவதால் அதிகளவு நட்டம் ஏற்படுவதாகவும் இதன்போது சுட் டிக் காட்டப்பட்டது.

மேலும் உள்நாட்டு பழச்சாறு உற்பத்தியாளர்களின் பிரச்சினை தொடர்பாகவும் தேசிய பொருளாதார சபை கவனம் செலுத்தியது. பழச்சாறுகளில் அடங்கி யுள்ள சீனியின் அளவின் அடிப்படையில் விதிக்கப்பட்டுள்ள வரி தொடர் பாகவும் உள்நாட்டு பழச்சாறு உற்பத்தியாளர்கள், பயிர் செய்கையாளர்கள், பான உற்பத்தியாளர்கள் ஆகியோரை ஊக்கப்படுத்தி, அவர்களுக்கு அதிக வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதற்கான உரிய முறையொன்றினை இனங் காண்பதற்கு குழுவொன்றினை நியமித்து, அதன் அறிக்கையை தேசிய பொரு ளாதார சபையில் சமர்ப்பிக்குமாறு இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் சுபர் பொஸ்பேற்று உரத்திற்கு மாற்றீடாக எப்பாவல அப்பற்றைற்றினை உபயோகித்து மொனோ பொஸ்பேற்றுக்களை உற்பத்தி செய்வதற்கான முறை தொடர்பாகவும் தேசிய பொருளாதார சபையில் கவ னம் செலுத்தியதுடன், இதனூடாக உர கொள்வனவிற்காக செலவிடப்படும் அந்நிய செலாவணியை மீதப்படுத்த முடியுமென விசேடமாக வலியுறுத் தப்பட்டுள்ளது.

துறைமுகத்திற்கு கொண்டுவரப்படும் பொருட்களை பரிசோதனை செய்தல் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதுடன், எழுமாறாக மாதிரிகளை பெற்று ஸ்கேன் செய்வதற்கு பதிலாக பூரணமாக மாதிரிகளை பரிசோதனை செய்ய வேண்டியதன் முக்கியத்துவமும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

அதற்கமைய தற்போதைய நிலை தொடர்பில் அறிக்கையொன்றினை விரை வில் பெற்றுத்தருமாறு ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத் துள்ளாா்.

களுகங்கை பள்ளத்தாக்கு பகுதிகள் எதிர்நோக்கியுள்ள வெள்ளப்பெருக்கு அனர்த்தம் தொடர்பிலும் தேசிய பொருளாதார சபை கவனம் செலுத்தியது. இரத்தினபுரி, களுத்துறை நகரங்கள் உள்ளிட்ட பள்ளத்தாக்கு பிரதேசங்களின் வெள்ளப்பெருக்கு அனர்த்தத்தை கட்டுப்படுத்துவதற்கு உரிய செயற்திட்ட மொன்று அவசியமாகுமென அது நீண்டகாலமாக தாமதப்படுத்தபட்டுவரும் விடயமென ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

அதற்கான செயற்திட்டமொன்றை விரைவில் அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அந்த நீரினை வடக்கிற்கும் வடமேற் கிற்கும் கொண்டுசெல்வதற்கான செயற்திட்டம் தொடர்பில் சகல தரப்பி னர்களையும் உள்ளடக்கிய குழுவொன்றினை நியமித்து சாத்திய வள ஆய் வொன்றினை நடத்தவும் பணிப்புரை விடுத்துள்ளாா்.

இந்த அமர்வில் அமைச்சர்கள் மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன, கலாநிதி சரத் அமுனுகம, துமிந்த திசாநாயக்க, மஹிந்த அமரவீர, மஹிந்த சமரசிங்ஹ, மலிக் சமரவிக்ரம உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் ஜனாதிபதியின் செய லாளர் உதய ஆர்.செனவிரத்ன,

தேசிய பொருளாதார சபையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் லலித் சமரகோன், நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்ஹ உள்ளிட்ட அதிகாரிகள் ஆகியோரும் பங்குபற்றியதுடன், உள்நாட்டு கைத்தொழிலாளர்களும் வர்த்தகர்களும் இம்முறை தேசிய பொருளாதார சபை கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனா்.