Breaking News

தமிழீழத்தில் தமிழீழத்தை வரையவும் தடையா ?... விசாரணையினால் தவிக்கும் மக்கள்.!

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலய திருவிழாவில்  தமிழீழத்தை விவரித்து சுவாமிக்கு அலங்காரம் செய்தமைக்காக இதுவரை 9 பேரிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் வாக்குப் பதிவுகளை முன்னெ டுத்துள்ளனா். 

தனித் தமிழீழத்தை அடையாளப் படுத்தும் வகையில் சுவாமிக்கு யார் அலங்காரம் செய்தது என்பது தொடர் பாகவே ஊடகவியலாளர் ஒருவர் உட் பட 9 பேரிடம் ரி.ஐ.டி என்ற பயங்கர வாத விசாரணைப் பிரிவு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள னா்.

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை கண் ணகை அம்மன் ஆலயத்தில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற திரு விழா வில் வடக்கு - கிழக்கு மாகாணங் களை ஒன்றிணைத்து தமிழீழ வரைபடத்தை ஒத்த அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட தனி ஈழக் கோரிக்கையைக் குறிக்கும் வகையில் ஈழ வரைபடத்தை ஒத்த வகை யில் ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத்தில் சுவாமி அலங்கரிப் பட்டிருந்ததாக பெரும் சர்ச்சையும் எழுப்பப்பட்டுள்ளது.

இந் நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரி வினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் யாழ்ப்பாணம் நீதி வான் நீதிமன்றில் வழக்கு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர், இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள், ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் ஆலய பூசகர் ஆகியோரிடமும் பயங்கரவாத விசா ரணைப் பிரிவினர் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளனா்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலய திருவிழா தொடர்பாக ஊடகவியலாளர் உதயராசா ஸ்ராலின் சகோதரர் உதயராசா ஜெஸ்ரினிடம் நேற்று முன்தினம் பயங்கரவாத விசாரணைப் பிரி வினர் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளனர்.

அத்துடன் பிரதேசத்தைச் சேர்ந்த க. இன்பரூபனிடம் நேற்றைய தினம் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளனர். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை கண் ணகை அம்மன் ஆலய திருவிழாவில் தமிழீழ வரைபடத்தில் யார் அலங்காரம் செய்தது, அந்த செய்தியை ஊடகங்களுக்கு வெளியிட்டது யார் என்ற கேள் விகள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரினால் எழுப்பப்பட்டுள்ளது.