Breaking News

யுத்தம் முடிவடைந்தும் நல்லாட்சியில் சித்திரவதைகள் முன்னாள் போராளி.! (காணொளி)

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பத்து வருடங்கள் பூர்த்தியாவதற்கு ஒருசில மாதங்களே உள்ள நிலையிலும், விசாரணை என்ற பெயரில் அழைத் துச் செல்லும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு பொலிசார் தொடர்ந்தும் கொடூ ரமான சித்திரவதைகளை மேற்கொள்வதாக முன்னாள் போராளியொருவர் தெரிவித்துள்ளார். 

பயங்கரவாத விசாரணைப் பிரிவின ரால் எதிர்வரும் 29 ஆம் திகதி விசார ணைக்கு வருமாறு அழைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன் னாள் போராளியான கந்தையா பிரபாகரன்  இவ்வாறு தெரிவித்துள் ளாா்.

மைத்ரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத் திலும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் தமிழர்கள் துன்புறுத்தப்படு வதாக ITJP, JDS போன்ற மனித உரிமை அமைப்புக்கள் ஆதாரங்களுடன் அறிக் கையிட்டுள்ள நிலையில் அவற்றை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்திருந் தது.

இந்த நிலையிலேயே நேற்றைய தினம் விசாரணை என்ற பெயரில் அழைக்கப் பட்டு தான் துன்புறுத்தப்படுவதாக முன்னாள் போராளி கந்தையா பிரபாகரன் தெரிவித்துள்ளாா்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி - மறவன்புலவு பகுதியில் அச்சகமொன்றை நடத்தி வரும் முன்னாள் போராளியான கந்தையா பிரபாகரனை கொழும்பிலுள்ள தமது அலுவலகத்திற்கு விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் நேற்றைய தினம் தெரிவித்துள்ளனா்.

அவர் தொடர்ந்தும் வாக்குமூலமளிக்கையில், எதிர்வரும் 29ஆம் திகதி காலை 09.30 ற்கு கொழும்பிலுள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு வருமாறு இந்த அழைப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் 2002 ஆம் ஆண்டே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகியிருந்ததாக தெரிவிக்கும் கந்தையா பிரபாகரன், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தான் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடொன்றில் பணிபுரிந்ததாகவும் தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில் 2011 ஆம் ஆண்டு நாடு திரும்பி வியாபார நடவடிக்கையில் ஈடு பட்டுவரும் நிலையிலேயே 2011 ஆம் ஆண்டு முதல் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தன்னை தொடர்ச்சியாக அழைத்து விசாரணைக்கு உட்படுத்தபடுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளாா்.


மேலும் தன்னை விசாரணைக்கு அழைத்ததற்கான காரணம் குறிப்பிடப்பட வில்லை இதேவேளை விசாரணை என்ற பெயரில் அடிக்கடி அழைக்கும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தன்னை கொடூரமாக தாக்கி துன்புறுத்தி வருவதாகவும் கந்தையா பிரபாகரன் தெரிவித்துள்ளாா்.