Breaking News

ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பிரதிநிதி ஜனாதிபதியை சந்தித்தார்.!

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி ஹனா சிங்கர் இன்று (31) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துள்ளாா்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசி யல் நிலைமை தொடர்பாக ஜனா திபதி ஐ.நா பிரதிநிதிக்கு தெளிவுபடுத்தியதுடன், அரசாங் கத்தின் சகல நடவடிக்கைகளும் அரசியல மைப்பின் பிரகாரமே முன்னெடுக்கப்பட்டுள்ள தாகத் தெரிவித்துள்ளாா்.

நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாது காத்து ஜனநாயக கட்டமைப் பிற்குள் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் சபை தொடர்ச்சியாக இலங்கைக்கு வழங்கிவரும் ஒத்துழைப்புகளிற்கு பாராட்டு தெரிவித்துள்ளாா்.

இதன்போது கருத்து தெரிவித்த ஹனா சிங்கர் ஐக்கிய நாடுகள் சபை தொட ர்ந்தும் இலங்கைக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளாா்.