Breaking News

நவம்பர் 27ஐ நினைத்தோம்! விடுதலையாடிகளை நினைத்தோமா?

தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே…. இவ்வாறு ஆரம்பித்து இதயத்தை ஊடறுத்து…விழிகளில் நீர்ப்பெருக்கை உருவாக்கிய அந்த உயரிய கீதத்தை செவிமடுத்து விட்டோம்.

வல்லமை தாருமென்றுங்களின் வாச லில் வந்துமே வணங்குகின்றோம்!உங் கள் கல்லறை மீதிலும் கைகளை வைத் தொரு சத்தியம் செய்கின்றோம்!என்ற சங்கற்பங்களும் முடிந்தன.

அன்பான தமிழீழ மக்களே எனவிளித்து ஒலிக்கும் மாவீரர் தினஉரை என்ற கொள்கை பிரகடன உரை இந்த முறையும் வரவில்லை அந்த உரைக்குரிய வரின் கம்பீர ஆதர்சனமும் இல்லை.

பிரக்ஞை உள்ள தமிழ் மனங்கள் இன்று பத்தாம் ஆண்டாகவும் பட்டாம் பூச்சி யாக சிறகடித்து அந்தக்குரலை.. அந்தக்குரல் வழங்கும் செய்தியை அவரது தரிசனத்தை தேடி ஓய்ந்தன.

நீரோடையை வாஞ்சிக்கும்மான் போல சமகால அரசியல் வரட்சியால் கையறு நிலையிலுள்ள தமிழினம் தாம் வாஞ்சிக்கும் தன்னலமற்ற ஒரு தலைவரை தேடிக்கொள்வது இயல்பு தானே.

இனியென்ன மாவீரர்நாள்2019 என்ற நீட்சியின்அடையாளத்தில் இதே சுழற்சிக் காக காத்திருப்போம்!தாயகப்புதல்வர்களின் ஈகங்களை சொல்வதற்கு பிரக்ஞை உள்ள தமிழர்கள் ஒருபோதும் பின் நிற்பதில்லையென்பதும் யதார்த் தம் தானே! காலமாகி கடந்த நாட்களிலும் தெரிவித்தோம்.

2018 நவம்பர் 27 ஆன இன்றும் சொன்னோம். இனிவரும் நாட்களிலும் ஈகங் களை சொல்வோம் அதிலேதும் ஐயமில்லை. இன்றும் அப்படியே வல் லமை தாருமென்று உங்களை வணங்கினோம்! நேரடியாக கல்லறைத் தோட்டம் செல்லாத மாந்தர்களும் மனங்களில் கனன்றார்கள்.

முழுமையாக இல்லாமல் சிதைந்த குவியலான கல்லறைகள் மீது கைகளை வைத்து சத்தியம் செய்யாவிடினும் மௌனித்து நின்றோம். உயிரில் தொடர்பு டைய உறவுகளின்பிலாக்கணமும் எங்கள்செவிகளில் ஒலித்தன.

ஆம்! மாவீரர் நாள் 2018 புனிதமாக கடந்தது. இப்போது தினவெடுக்கும் தினசரி வாழ்வின் அழைப்புக்குத் திரும்புகிறோம். புகலிடவாசிகளான நாங்களும் என்னே செய்வோம்? எங்களுக்கு ஆயிரம் சோலிகள் உண்டே மாதம் முடிகிறது வாடகைப்பணம்  தவணைப்பணம்.. பிள்ளைகளின் பிரத்தியேக வகுப்புக்கு சுளையாக கொடுக்கும் ரியுசன் பணம்..நீர் மின்சாரம் போன்ற இன்னோரன்ன சிட்டைத் துண்டுகள் எல்லாம் எமை நெருக்குமே என நினைத்துக் கொள் வீர்கள்.

வீரத்தின் விளை நிலமான எமது தாயகத்திலும் அவ்வாறே. அங்குள்ள மாந்தர்களுக்கும் இன்னல்களும் கவலைகளும் நெருக்கும் வாரங்களும் உண்டு. ஆனால் தாயக விடுதலை என்ற ஒன்றைச்சொல்லின் பின்னால் அணி வகுத்து நின்றவர்கள் பெடியள்விடாங்கள் என நீங்கள் புகழ்பாடிய அதே போராளிகள் 2009 மே18 க்கு பின்னர் எப்படி வாழ்கின்றார்கள்?

இல்லையென்றால் மாவீர்களை பெற்றெடுத்த உறவுகள் அவர்களை வாழ்க் கைத் துணையாக வரிந்தவர்கள் அவர்களின் வாரிசுகள் இப்போது என்ன செய் கின்றார்கள்?

இவர்களின்நிலைக்கு பொறுப்புக்கூறுவதுயார்? இதற்குள் இப்போது சிங்கள தேசத்தில் இடம்பெறும் கதிரை பிடிப்பு ஆட்டத்தின் முடிவை அறியவேண்டிய புதியஆர்வம் வேறுஎமக்குள் உள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத்தைகலைக்க அதன்அரசதலைவர் வெளியிட்ட அதி சிறப்பு வர்த்தமானி அறிவித்தலுக்கு சவால்விடுக்கும் மனுவை,விசாரிக்கும் ஏழு நீதிபதிகளும் எதிர்வரும்7க்கு பின்னர்வழங்கும் தீர்ப்பை அறிய வேண் டுமே?

இதற்கிடையே இன்றுஉங்களைத்துதித்தபடியே கொழும்பில்நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வு காட்சிகளிலும்ஒரு ஓரக்கண்ணை வைத்தோம். அதன் படி ஆளும்கட்சிஎன வாய்கிழியகிழிய உரிமைகோரும் மைத்திரி மகிந்த தரப்பு உறுப்பினர்கள் இன்றை அமர்வில் கலந்துகொள்ளாத காட்சிகள் தெரிந்தன.

ஒருவேளை முள்ளிவாய்கால் பேரழிவுடன் தமிழர்களின் போராட்டம் உறை நிலைக்கு உள்ளாகாமல் இருந்திருந்தால் சிங்கள தேசத்திலும் இவ்வாறு ஒரு அனாக்கி எனப்படும் அரசின்மையற்ற நிலைக்கும் அடிபாடுகளுக்கும் நேரம் இருந்திருக்குமோ என்னவோ.

அன்று தமிழர்கள் மீதான போரில் ஒன்றாக நின்றவர்கள் இப்போது தற்காலி கமாக ஜனநாயகத்துக்காக அலரிமாளிகையின் சட்டபூர்வத்துக்காக என சொல்லி அடிப்படுகிறார்கள். நாடாளுமன்றம் சபாநாயகரின் பிணைவலய மாகி விட்டதாக ஒருசாரார் துக்கிக்க மறுசாரர் மைத்திரியின் பிடிவாதம் கண்டு விக்கித்துள்ளனா்.

ஆனால் நாளையே தமிழர்களின் அபிலாசைகள் குறித்த பேசுபொருள் வந்தால் இன்று கள்ளன் பொலிஸ் விளையாடுபவர்கள் நாளையே ஒன்றாகி விடுவார் கள். இது கல்லறையில் இருந்தாலும் கூட உங்களுக்கு தெரியாத சூட்சுமமும் அல்ல.

எமது அரசியல்வாதிகளுக்கும் இப்போது பொழுது போகவேண்டுமே கொழும் பின் இந்த கொழுக்கட்டை மோதக அதிகாரப்போட்டிக்குள் அவர்களும் சுறு சுறுப்பாக உள்ளனர் தான்.

இப் புனித நாளில் ஓ! தமிழ் மாந்தர்களே என விளித்து நீங்கள் பெறுமதியான ஒரு வினாவை கேட்பது புரிகிறது? ஓ தமிழ்;மாந்தர்களே இன்று வணக்கத் திற்குரிய புனிதநாள் என்றீர்கள்.

எழுச்சிகொள்ளும்மகத்தான நாள் என்றீர்கள். மண்ணின் விடிவுக்கான தம்மை ஈகித்த ஈகியர்களை நெஞ்சுருகிப்பூசிக்கும் திருநாள் என்றீர்கள் எல்லாமே சரி தான்.

இலங்கைத்தீவின் இயங்கியல் விதியில் திருப்பத்தை ஏற்படுத்திய எங்களின் விருப்பத்திற்காக உழைத்தபணிக்கு உழைப்பீர்களா? புகலிடத்தில் அடம்பன் கொடியாக பரவியிருந்தாலும் அதனை அரசியல் மிடுக்காக மாற்றப் பொறுப்பு ஏற்றீர்களா?

இனத்தின் அபிலாசைகளுக்கு உழைக்கும் உண்மை மனிதர்களாக நிற்கின் றீர்களா எனக்கேட்கின்றீர்கள். என்ன பதில் சொல்ல முடியும் எங்களால்? வர லாற்று நாயகர்கள்நீஙகள் விரும்பும்ஒரு எதிர்கால வரலாற்றைப் புரட் டக்கூடிய அறவழி உறுதி எம்மிடம் உள்ளதா?

தர்மத்தின் வழி நிற்கும் ஒருசத்திய இலட்சியங்களின் வீணடிப்புக்கு இட மில்லை ஏன் சூளுரைக்கவும் முடியவில்லை? அப்படியானால், நவம்பர்27 க்காக எழுச்சிகொண்டு…பின்னர் உறையிலிடப்படும்; வெறும் அட்டைக் கத் திகளா நாம்? மறந்து விடாதீர்கள் மனித வரலாற்றுச் சக்கரம் காலங்களைக் கடந்து யுகங்களை விழுங்கி முடிவில்லாமல் தொடா்கின்றது.


- நன்றி ஐ.பி.சி இணையத்திற்கு -