மைத்திரியின் உண்மை நோக்கம்; ரணில் பேரதிர்ச்சி? - THAMILKINGDOM மைத்திரியின் உண்மை நோக்கம்; ரணில் பேரதிர்ச்சி? - THAMILKINGDOM
 • Latest News

  மைத்திரியின் உண்மை நோக்கம்; ரணில் பேரதிர்ச்சி?

  தமிழ் தேசியக் கூட்டமைப்பை நேற்று முன்தினம் சந்தித்த சிறிலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன ரணில் தலைமையிலான ஐக்கியதேசியக் கட்சி தனது பெரும் பான்மையை நாடாளுமன்றில் நிரூபித்தாலும் தான் மீண் டும் ரணிலை பிரதமராக பதவிப் பிரமாணம் செய்யப்போவதில்லை என தெரி வித்துள்ளாா்.

  குறித்த கூற்று ஐக்கிய தேசியக் கட்சியி னரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத் தியுள்ளதாக கட்சியின் முக்கியஸ்தர் தெரி வித்துள்ளாா். நேற்று முன் தினம் புதன் கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்த அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, ரணில் தரப்புக்கு ஆதரவு வழ ங்குவதை விடுத்து அரசாங்கத்துக்கு ஆதரவை செலுத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளாா்.

  அக்கோரிக்கையை நிராகரித்த கூட்டமைப்பு, தாம் மஹிந்த ராஜபக்‌ஷவை பிர தமராக நியமித்தமையை எதிர்த்து வாக்களிக்கவுள்ளதாக தெரிவித்த போதே அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளாா்.

  இதேவேளை நேற்று முன்தினம் மாலை தனது கட்சி உறுப்பினர்களைச் சந் தித்த அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றில் தமது பெரும் பான்மையை நிரூபிப்பதற்குத் தேவையான சகல ஏற்பாடுகளையும் தான் செய் வதாகவும் அது குறித்து கவலை வேண்டாமெனவும் தெரிவித்துள்ளாா்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: மைத்திரியின் உண்மை நோக்கம்; ரணில் பேரதிர்ச்சி? Rating: 5 Reviewed By: tamil2017
  Scroll to Top