Breaking News

மீண்டும் மைத்திரியின் திடீர் நடவடிக்கையால் அதிர்ச்சியில் ரணில் தரப்பு!

சிறிலங்காவின் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன அவசரமாக அழைத்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது.

இப் பேச்சுவார்த்தைகளின் போது, நேற்றைய தினம் கட்சித் தலைவர்க ளிடம் பேசிய விடயங்கள் குறித்து மஹிந்த ராஜபக்‌ஷவிடம் விளக்கி யுள்ளார்.

இதன்படி அரசியலமைப்பின்படியே எல்லாம் நடக்க வேண்டுமென்பதை வலியுறுத்தியதாகவும் - பிரதமர் பத வியை ரணிலுக்கு வழங்க முடியாதென்பதை திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாகவும் - மஹிந்தவிடம் தெரிவித்துள்ளாா்.

மேலும், பிரதமர் கடமைகளை தொடருமாறும் மஹிந்தவிடம் கேட்டுக் கொண் டுள்ளார். எவ்வாறாயினும் நேற்றைய தினம் தம்மைச் சந்தித்த மைத்திரி, நாளைய தினம் மீண்டும் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை நிபந்தனைகளு டன் நடத்துமாறும் அதனை தான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்ததாகவும் கட் சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனா்.

இந்த நிலையில் மைத்திரியின் இத் திடீர் மாற்றம் பெருத்த அதிர்வலையை மீண்டும் தோற்றுவித்துள்ளதாக அரசியல் பிரதானி ஒருவர் தெரிவித்துள்ளாா்.