Breaking News

வடக்கு அரசியலில் திருப்பம் அதிரடியாக களமிறங்குகின்றார் விக்கினேஸ்வரன்.!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிரடியாகக் களமிறங்க தயராகியுள்ளன.

நாடாளுமன்றம் கடந்த வெள்ளிக் கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கலைக்கப்பட்ட நிலையிலேயே இம் முடிவில் மும் முரமாக இறங்கியுள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.

தமிழ் மகள் கூட்டணிக்கு வேட்பாளர் களைத் தேர்வு செய்யும் நடவடிக்கை களில் நீதியரசர் விக்கினேஸ்வரன் மும்முரமாக இறங்கியுள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.

சில நாட்களின் முன்னர் புதிய கட்சியொன்றை அறிவித்த முதலமைச்சர் மாகாண சபைத் தேர்தலை இலக்கு வைத்தே அந்த அறிவிப்பை வெளியிட் டதாக பேசப்பட்டாலும் தற்போது பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலை யில் இந்த திடீர் முடிவுக்கு அவரது கட்சி வந்துள்ளதாக உள் விவகாரங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும் ஜனாதிபதியின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட செயலைக் கண்டித்து நான்கு கட்சிகள் இன்று உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் தொடுக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.