Breaking News

பிறந்தநாள் கொண்டாட்டத்தினால் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரின் நிலை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த இடமான வல்வெட்டித்துறையிலுள்ள இல்லத்தில் அவருடைய பிறந்த நாள் நிகழ்வைக் கொண்டாட ஏற்பாடுகள் செய்தவர்களை பொலிஸார் விசா ரணைக்கு அழைத்துச் சென்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட் டுள்ளது.

தலைவர் பிரபாகரனின் 64 ஆவது பிறந்த நாள் இன்றாகும். இப் பிறந்த நாளை முன் னிட்டு வல்வெட்டித் துறையிலுள்ள அவ ரது இல்லத்திலும் பிறந்த நாள் நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

இதற்காக அவரது காணி துப்பரவுப் பணி கள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அங்கு துப்பரவு பணியில் ஈடுபட்டி ருந்தவர்களின் அடையாள அட்டைகளைப் பறித்துக் கொண்டு அவர்களையும் விசாரணைக்காக பொலிஸ் நிலையம் வருமாறும் அழைத்துச் சென்றுள்ளனா்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அத்தோடு அங்கு பொலிஸாரும் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டிருக்கின்றமையால் பதற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும் வல் வெட்டித்துறை தவிசாளர் ஆகியோரால் பிறந்த தினத்திற்காக பனர் மற்றும் கேக் வெட்டி கொண்டாடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரான சிவாஜிலிங்கத் தின் வீட்டைச் சுற்றியும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் சிவாஜிலிங்கம் மற்றும் வல்வெட்டித்துறை தவிசாளர் ஆகி யோரைப் பொலிஸார் கைது செய்யப்பட்டனர்.

இருப்பினும் சிறிது நேரத்திற்குள் இருவரும் விடுதலை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.