மஹிந்த அரசாங்கத்தில் இணைய பணம் கேட்டேனா? மறுக்கும் தமிழ் எம்.பி (காணொளி) - THAMILKINGDOM மஹிந்த அரசாங்கத்தில் இணைய பணம் கேட்டேனா? மறுக்கும் தமிழ் எம்.பி (காணொளி) - THAMILKINGDOM
 • Latest News

  மஹிந்த அரசாங்கத்தில் இணைய பணம் கேட்டேனா? மறுக்கும் தமிழ் எம்.பி (காணொளி)

  மஹிந்த அரசாங்கத்துடன் இணைவதற்கு பதிலாக அமைச்சு பதவியையும் பணத்தையும் கோரியதாக சக நாடாளுமன்றஉறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வெளியிட்ட கருத்துக்களை தமிழ்த் தேசிய  உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் முற்றாக நிராகரித்துள்ளார்.

  தமக்கு எதிராக இவ்வாறான குற்றச் சாட்டுக்களை முன்வைத்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.

  ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரி பால சிறிசேனவினால் அதிரடியாக பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் பெரும்பான் மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளார்.

  இதற்காக ஐக்கிய தேசியகட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மஹிந்த வாதிகள் பேரம் பேசிவருவதாக தெரிவிக்கப்படும் நிலையில், நேற்று முன் தினம் யாரும் எதிர்பாராத வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் பிரதி அமைச்சராக பதவியேற்றி ருந்தார்.

  இந்த நிலையில் மஹிந்தராஜபக்சவின் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க முன் வந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு பதி லாக அமைச்சு பதவி, பணம் உள்ளிட்ட மேலும் சிலகோரிக்கைகளை முன் வைத்துள்ளதாக சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளாா்.

  இக் குற்றச்சாட்டை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் பலரும் மறுத்துள்ள நிலையில், தம் மீது சிவசக்தி ஆனந்தன் முன் வைத்த குற்றச்சாட்டை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சவரணபவனும் நிராகரித்துள்ளார்.

  மஹிந்த ராஜபக்சவிற்குஆதரவு வழங்குவதற்கு பதிலாக வர்த்தக வாணிபத் துறை அமைச்சு பதவி, 30 கோடி ரூபா பணம்மற்றும் டக்ளஸ் தேவானந்தா வினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மீளப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை சரவணபவன் கோரியுள்ளதாக சிவசக்தி ஆனந்தன் தெரிவித் துள்ளாா்.

  ஏற்கனவே மஹிந்தஅரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதற்கு பேரம் பேசப் பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப் பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா தெரிவித்திருந்தாா்.

  புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பி னர்களை இலஞ்சம் வழங்கி வாங்குவதற்கு முயற்சிக்கின்றமை தொடர்பில் நம்பகமான ஆதாரங்கள் உள்ளதாக நல்லாட்சிஅரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தெரிவித்துள்ளார்.

  மஹிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கத்தில் உள்ளவர்கள் தமக் கான ஆதரவைப் பெறுவதற்கு பதிலாக பதவிகளையும் பணத்தையும் நாடாளு மன்ற உறுப்பினர்களுக்கு வழங்க முன்வந்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளாா்.


  - நன்றி ஐ.பி.சி இணையத்திற்கு -

  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: மஹிந்த அரசாங்கத்தில் இணைய பணம் கேட்டேனா? மறுக்கும் தமிழ் எம்.பி (காணொளி) Rating: 5 Reviewed By: tamil2017
  Scroll to Top