Breaking News

மைத்திரிக்கு எதிராக களமிறங்கிய தமிழா்.!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்ததை எதிர் த்து இன்றைய தினம் இலங்கையின் மீயுயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய ப்பட்ட பத்து மனுக்களில் ஒன்றாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன்கூலின் மனுவும் பிரதி பலித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு நாடா ளுமன்றம் கலைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டு வெளியிட்ட நிலையில் பல்வேறு தரப்பிலிமிருந்தும் எதிர்ப்புக்கள் கிழம் பின. 

இதனையடுத்து குறித்த செயற்பாட் டிற்கு எதிராக இன்று பிரதான கட்சி களான ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சில கட் சிகளும் சில கட்சிசாரா அமைப்புக்களும் மீயுயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தனர். குறித்த மனுக்கள்மீதான விசாரணைகள் பிரதம நீதியரசர் மற்றும் இரண்டு உயர் நீதிமன்ற நீதியரசர்கள் உள்ளிட்ட ஆயத்தின் முன்னிலையில் நடந்துவரும் நிலையில் அதுகுறித்த எதிர்பார்ப்புக்கள் வலுவாகியுள்ளன.

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிலிருந்து மஹிந்த தேசப்பிரிய மற்றும் னளின் அபயசேகர ஆகியொர் வெளியேறிய நிலையில், ஆணைக்குழுவின் மூன்றாவது உறுப்பினரான பேராசிரியர் ரட்ணஜீவன்கூல் கையெழுத்திட மறு த்துள்ளார்.

இந்த நிலையிலேயே அவர் இன்றைய தினம் ஜனாதிபதியின் தீர்மானத்தை எதிர்த்து மனுத்தாக்கல் செய்துள்ளார்.