Breaking News

மகிந்தவுக்கு சாவுமணியடித்த மைத்திரி இது முடிவல்ல - ஆரம்பம்.!

நாட்டின் அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் மீறி சர்வாதிகார ஆட்சியை நிறுவ முற்பட்ட மைத்ரி – மஹிந்த கூட்டணியின் வீழ்ச்சிக்கான சாவு மணி இன்றைய தினம் அடிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரி வித்துள்ளது.

இதற்கமையவே நாட்டின் சட்டபூர்வ மான பிரதமரான ரணில் விக்கிரம சிங்கவிற்கு ஆதரவு வழங்குவதற்காக பிரதி அமைச்சர் பதவியை தூக்கி எறி ந்துவிட்டு மனுஷ நாணயக்கார வந்தி ருப்பதாக குறிப்பிடும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன இது வெறும் ஆரம்பமே எனத் தெரிவித்துள்ளாா்.

இதற்கமைய சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவினால் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்சவை நிராகரித்துவிட்டு மஹிந்த –மைத்ரி கூட்டணியிலிருந்து மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் படையெடுக்க உள்ளதாகவும் மருத்துவர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் அரச தலைவரான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் ஒக்டோபர் 26 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ச பிரதமராக அதிரடியாக நியமிக் கப்பட்டுள்ளாா்.

இந்த நியனம் அரசியல் சாசனத்திற்கும் ஜனநாயகத்திற்கும் முரணானதென குற்றம் சுமத்தி வரும் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க மற்றும் அவர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினர் ரணிலே நாட்டின் சட்டபூர்வமான பிரதமர் என்று சூளுரைத்தவாறு உள்ளனா்.

அதேவேளை ஒக்டோபர் 27 ஆம் திகதி நாடாளுமன்றத்தை ஒத்திவைத்த அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவின் தீர்மானத்தையும் கடுமையாக விமர் சித்து வருகின்றனர்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கும் அரச தலைவர் மைத்ரியின் தீர்மானங்களே காரணம் என்றும் குற்றம்சாட்டிவரும் ஜே.வி.பி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு வலியுறுத்தியுள்ளனா்.

இந்த நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகமும் நாடாளுமன் றத்தை தாமதமின்றி கூட்டுமாறு தொடர்ச்சியாக அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றன. எனினும் இவற்றை உதாசீனம் செய்துள்ள அரச தலைவர் மைத்ரி நாடாளுமன்றத்தை முன்னர் அறிவித்திருந்த தினத்திற்க இரண்டு தினங்களுக்கு முன்னதாக அதாவது நவம்பர் 14 ஆம்திகதி கூட்டுவதாக உத் தரவிட்டுள்ளாா்.

இந்த நிலையில் நாடாளுமன்றில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிப்பதற்காக கடும் முயற்சிகளில் ரணில் – மஹிந்த அணிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான தரப்பினர் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பெருந்தொகைப் பணத்தையும் அமைச்சுப் பதவியையும் கொடுத்து விலைக்கு வாங்கி வருவதாகவும் தொடர்ச்சியாக குற்றச் சாட்டுக் கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எனினும் இதனை மஹிந்த அணியினர் நிராகரித்து வருகின்ற போதிலும் கட் சித் தாவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஆரம்பத்தில் 30 கோடி ரூபாய் பணம் கொடுப்பதாக பேரம் பேசிய மஹிந்த அணியினர் தற்போது அத் தொகையை ஐம்பது கோடி வரை உயர்த்தியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி யின் முக்கியஸ்தர்கள் பகிரங்கமாக தெரிவித்துள்ளனா்.

பரஸ்பரம் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் மற்றும் நிராகரிப்புகளுக்கு மத்தி யில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து இதுவரை மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக மைத்ரி – மஹிந்த அணியில் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.

இவர்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரனும் மஹிந்த – மைத்ரி அணியில் இணைந்துள்ளாா்.

இதனையடுத்து கிழக்கு பிராந்திய அபிவிருத்தி பிரதி அமைச்சராக நியமிக்கப் பட்டார். இந்த நிலையில் நேற்றைய தினம் மைத்ரி – மஹிந்த அணியில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காலி மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்துள்ளாா்.

மைத்திரி மஹிந்த தலைமையிலான புதிய அரசாங்கத்தின் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் பதவியில் இருந்தும்  நிலை யிலேயே மனுஷ நாணயக்கார ரணிலுடன் இணைந்துள்ளாா்.

மனுஷ நாணயக்காரவின் இந்த வருகை மைத்ரி – மஹிந்த கூட்டணியின் வீழ்ச்சியின்ஆரம்பம் என்று அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலா ளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட தேசிய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சரான நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித் துள்ளார்.

“நேற்று சபாநாயகர் கரு ஜயசூரிய புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அமைச்சரவையினை தான் ஏற்றுக் கொள்வதில்லையென மிகத்தெளிவாக அறிவித்திருந்தார். எமது தரப்பில் 116 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்ப மிட்டு எமது பெரும்பாண்மையினை காண்பித்துள்ளோம்.

ஆனால் மறுபுறம் மஹிந்த ராஜபக்சவிற்கு பெரும்பாண்மை இல்லாத கார ணத்தினால் தெளிவான கருத்தொன்றினை சபாநாயகர் முன்வைத்துள்ளாா்.

அந்த அறிவிப்பினைத் தொடர்ந்து இன்று ஒரு முடிவு எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணாயக்கார பிரதியமைச்சர் பதவியினையும் தூக்கியெறிந்துவிட்டு இன்று எம்முடன் இந்த போராட்டத்தில் இணைந்துள்ளார்.

அரச பலம் மற்றும் பண பலத்தினைக் கொண்டு எமது பக்கம் உள்ளவர்களை கொள்வனவு செய்தாலும் தற்போது எம்மால் அதனை தலைகீழாக திருப்பக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

 இது ஆரம்பம் மட்டுமே இது முடிவல்ல. இதேபோல பலர் நடைபெற்ற இந்த ஆட்சி மாற்றத்தினை ஏற்றுக்கொள்ளாமல் எம்முடன் இணைந்து கொள்வதற் கான கலந்துரையாடி வருகின்றனர்.

இதற்கமைய மஹிந்த – மைத்ரி இணைந்து உருவாக்க முயற்சிக்கம் சர்வாதி கார ஆட்சிக்கு எதிரான பல நாடாளுமன்ற உறுப்பினர்களை விரைவில் எமது அணியில் காணக்கூடியதாக இருக்கும். மஹிந்த – மைத்ரி கூட்டணி மேற் கொண்ட அனைத்து சதி நடவடிக்கைகளும் நாளுக்கு நாள் தோல்வி கண்டு வருகின்றது.

இந்த மாற்றம் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பினையும் பாதுகாக்கும் போராட்டத்திற்கு கிடைக்கப்பெறும் பாரியவெற்றிகளாகும். தற்போது 120 நாடா ளுமன்ற உறுப்பினர்கள் எம் பக்கம் உள்ளனர்.

இனிவரும் காலங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிரிக்கும்”. எனினும் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்சவிற்கு நாடாளுமன்றில் தேவையான பெரும்பான்மைப் பலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வைத்து அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன அடித்துக்கூறியிருந்தார்.

இதனால் நாடாளுமன்றில் 113 பெரும்பான்மைப் பலத்தை நிரூபிப்பது தொடர் பில் எந்தவொரு பிரச்சனையும் இல்லையென மைத்ரி குறிப்பிட்டிருந்ததுடன் அது குறித்து எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லையெனத் தெரிவித் துள்ளாா். 

சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவின் இவ் அறிவிப்பு வெளி யாகிய மறுநாளான சவம்பர் ஆறாம் திகதி அவரது அணியைச் சேர்ந்த காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார ரணிலுக்க ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளதால் செய்வதறியாது மைத்ரி – மஹிந்த அணி குழம்பிப்போயுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த தெரிவித்துள்ளாா்.

மனுஷ நாணயக்கார நேற்றைய தினம் ரணில் விக்ரமசிங்கவை நேரில் சந்தித்துமேற்கொண்ட நீண்ட நேர பேச்சுவார்த்தையின் பின்னரே எமக்கு ஆதரவு தெரிவிக்கும் முடிவினை எடுத்தார்.

அதனால் தற்போது மறுதரப்பினருக்கு இடி விழுந்ததைப் போல ஒவ்வொருக் கொருவர் ஒவ்வொன்றைத் கூறிக்கொண்டு பித்து பிடித்தவர்களைப் போல் அங்கும் இங்கும் அலைந்து திரிவதாக எமக்கு தெரியவந்துள்ளது.

ஜனநாயகத்தை நிலைநாட்டும் எமது இப் போராட்டத்தினை முன்னெடுப்பதே எமது தேவையாக உள்ளது. நாட்டின் அரசியல் சாசனத்தை அப்பட்டமாக மீறி செயற்பட்டதை பொருட்படுத்தாது விட்டால் எதிர்காலத்திலும் இதே போன்ற தொரு துர்பாக்கிய நிலமையொன்று ஏற்படும்.

அப்போது நாம் இதனை தடுக்க எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வில்லை என்ற குற்றச்சாட்டு வரலாற்றில் நிச்சயம் பதிவாகும். அதனாலேயே அரசியல் சாசனத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரான நடவடிக்கைகளை தோற்கடிக்கும் இந்த போராட்டத்தை நாம் முன்னெடுத்திருக்கின்றோம்.

நல்லாட்சியில் நாம் எமது திட்டங்களை முன்னெடுக்க முடியாது மிகவும் கஷ்டத்திற்குள்ளானோம். ஆனால் நாட்டிலுள்ள அனைத்து ஊடகங்களும் எம்மை நோக்கியே அதிக தாக்குதல்களை மேற்கொண்டன.

எனினும் இன்று அந்த நிலமை மாற்றம் கண்டுள்ளது. தொலைக்காட்சி பத்திரிகைகள் உட்பட அனைத்து ஊடகங்களும் 2015 இற்கு முன் இருந்த சம்பிரதாயத்திற்கே மீண்டும் மிக வேகமாக நகா்ந்து கொண்டிருக்கின்றது.