Breaking News

பிரதமர் பதவி எனக்கு முக்கியமல்ல - மஹிந்த ஆவேச பேச்சு.!

இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கும், அந்நாட்டு பிரதமராக பதவி வகித்துவந்த ரணில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே மோதல் போக்கு உண்டானதை தொடர்ந்து கடந்த மாதம் 26 ஆம் தேதி ரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி விட்டு புதிய பிரதமராக போர்க்குற்றங்களுக்கு ஆளான ராஜபக்சேவை நிய மித்துள்ளாா்.

அதிபர் மைத்ரி. ஆனால், தாம் பதவி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது ; உடனடியாக பாராளுமன்றத்தினை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வழிவகை செய்ய வேண்டுமென தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தாா் ரணில்.

அதே சமயம், நாடாளுமன்றத்தினை முடக்கி ஆட்பிடிப்பு வேளையில் ஈடுபட்ட மைத்ரி - மஹிந்த தரப்புக்கு அம்முயற்சியில் தோல்வி ஏற்படவே நாடாளு மன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேனா கடந்த 9-ந் தேதி உத்தரவிட்டுள்ளாா்.

நாடாளுமன்றத்துக்கு அடுத்த வருடம் ஜனவரி 5 ஆம் தேதி தேர்தல் நடத்தப் படுமெனத் தெரிவித்துள்ளாா்.

 ஆனால், மைத்திரியின் அறிவிப்பினை எதிர்த்து ரணில் கட்சியினர் உள்ளிட்ட பலரும் இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு அதிரடியாக தடை விதித்துள்ளாா்.

தொடர்ந்து நேற்றைய தினம், இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் அத் தீர்மானம் வெற்றி பெற்ற நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ராஜபக்சே,

"இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் நேற்றைய தினத்தை போன்ற ஒரு கருப்பு தினத்தை நான் பார்த்ததில்லை. அதிபராக இருந்த எனக்கு பிரதமர் பதவி முக்கியமானதல்ல" என ஆவேசத் தொனியில் உரைத்ததுடன் வெளி நடப்பும் செய்துள்ளாா்.