Breaking News

ரணிலை பிரதமராக நியமித்தமை தொடர்பான வர்த்தமானி வெளியீடு.!

இலங்கை அரசியலில் கடந்த இரு மாதங்களாக ஏற்பட்ட மாற்றங்கள், குழறு படிகள் அனைத்தும் நீங்கி நேற்றைய தினம், ஐக்கிய தேசியக் கட்சியின் தலை வர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதி பதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுள்ளாா்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை முன் னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனா திபதியால் தனக்கு வழங்கப்பட்டிருந்த பிர தமர் பதவியை இராஜனாமா செய்ததைய டுத்தே, ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் பிரதமராக பதவியேற்றுள்ளாா்.

அத்தோடு, ரணில் விக்ரமசிங்க ஐந்தாவது முறையாகவும் பிரதமராக பதவி யேற்றுள்ளதுடன் ரணில் விக்ரமசிங்கவிற்கு பதவி பிரமாணம் செய்து வைத்து உரையாற்றும் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில முக்கிய நிபந் தனைகளை விதித்துள்ளாா்.

இந்நிலையில், பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமித்தமை குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வமாக வர்த்தமானியில் தெரிவித்துள்ளாா்.