Breaking News

ரணில் விக்ரமசிங்க முடிந்தால் முடித்துக் காட்டட்டும்; மஹிந்தவாதிகள் சவால்.!

நாட்டின் மூலச் சட்டமான அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் பாது காப்பதே தனது தலையாய கடமையும், பொறுப்பும் என்று சூளுரைக்கும் பிர தமர் ரணில் விக்ரமசிங்க முடிந்தால் பொதுத் தேர்தலை நடத்திக் காட்டட்டு மென மஹிந்தவாதிகள் சவால் விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டதுபோன்று, 155 இலட்சம் பேரின் உரிமைய, நாடாளுமன்றி லுள்ள 117 உறுப்பினர்களின் கட்டுப் பாட்டில் வைத்துக் கொள்ள இடம ளிக்க முடியாதென சிறிலங்கா பொது ஜன பெரமுன கட்சியின் தலைமை யகத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப் பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

ரோஹித அபேகுணவர்தன – “155 இலட்சம் பேரின் உரிமைய, 117 உறுப்பி னர்களின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியாதென ஜனாதிபதி தெரிவித் துள்ளார். முடிந்தால் பொதுத் தேர்தலை நடத்திக்காட்டுமாறு நாம் ரணில் விக்ரமசிங்கவிற்கு சவால் விடுக்கின்றோம்.

சவால் மக்கள் விடுதலை முன்னணிக்கும் பொருந்தும். நாங்கள் அரசியல் யாப் பினை மீறிச் செயற்படுவதாக் கூறி நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள்.


அவ்வாறெனினும் நாடாளுமன்றத்தை கலைக்கும் பிரேரணையை கொண்டு வாருங்கள். நாங்கள் 150 உறுப்பினர்களின் ஆதரவைத் பெற்றுத்தந்து அதனை மூன்றில் பெரும்பான்மையுடன் நிறைவேற்ற நாம் தயார். முடிந்தால் சவாலை ஏற்றுக்கொள்ளுங்கள்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் வாக்குப் பெட் டியை கண்டாலே அச்சம்”.  ஊடகச் சந்திப்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட ரோஹித அபேகுணவர்தன, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வின், நேற் றைய உரையினை அடுத்து அரசியல் சாசன சபையின் வெளிப்படைத் தன் மைத் தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ரோஹித அபேகுணவர்தன – “பதவியேற்றுக்கொண்ட தருணத்திலேயே, அந்த நியமனத்தை மேற்கொண்ட ஜனாதிபதியால் விமர்சிக்கப்பட்ட, திட்டு வாங் கிக்கொண்ட முதலாவது பிரதமராக ரணில் விக்ரமசிங்க கின்னஸ் உலக சாதனைப் படைத்துள்ளார்.

நீதித்துறையில் சிரேஷ்ட நீதிபதிகளாக இருக்கின்றவர்களுக்கு அநீதி இழைக் கப்பட்டுள்ளதாகவும், நீதிபதிகளை நியமிக்கின்றபோது அரசியலமைப்பு சபை பின்பற்றும் நடைமுறைகள் எவ்வளவு தூரம் பக்கசார்பற்றது நடுநிலையானது என்பதில் பிரச்சினை உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளாா்.

அவ்வாறெனின், அந்த சபையின் வெளிப்படைத்தன்மை தொடர்பில் கேள்வி கள் எழுகின்றன. ஆகவே ரணிலுக்கு சார்பானவர்களே தெரிவாகியிருக்கின் றார்கள் என்பது தெளிவாகின்றது”.

நாடாளுமன்றிலும், நீதிமன்றிலும் ஏற்பட்ட தோல்வியை அடுத்து ஒக்டோபர் 26 ஆம் திகதி ஜனாதிபதியுடன் இணைந்து ஆட்சிக் கவிழ்ப்பை மேற்கொண்டு பிரதமராக பதவியேற்றிருந்த மஹிந்த ராஜபக்ச, டிசெம்பர் 15 ஆம் திகதி தனது பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளாா்.

எனினும் அவரது பதவி ஏற்கனவே நாடாளுமன்றிலும், உச்ச நீதிமன்றிலும் பறிக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பு விஜயராம மாவத்தையிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் விசேட நிகழ்வொன்றை நடத்திய மஹிந்த அவரே தானே பிரதமர் என அறிவித்திருந்த பதவியிலிருந்து விலகுவதாக உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளாா்.

இந்த நிலையில் மாபெரும் வெற்றியொன்றை கைப்பற்றும் நோக்கிலேயே மஹிந்த ஒரு அடி பின்னோக்கி காலை எடுத்து வைத்துள்ளதாக மஹிந்த வாதி யான ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளாா்.

ரோஹித அபேகுணவர்தன – “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பதவி விலகிமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் வெளியிடப்படுகின்றன எனி னும், அவர் முன்வைத்த காலை, ஒரு அடி பின்நோக்கி வைக்கிறார் என்றால், மாபெரும் வெற்றியை நோக்கி  பயணிக்கிறார் என்பதே பொருள்”.