Breaking News

நீதிமன்ற தீர்ப்பினால் பேச்சுவார்த்தையில் இழுத்தடிப்பு - செல்வம் எம்.பி.

நீதிமன்ற தீர்ப்பினால் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பேச்சு வார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளாா்.

அரசியல் கைதிகளின் விடயம் தொட ர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற் கும் ஜனாதிபதிக்கும் கொழும்பில் நடைபெற்ற சந்திப்பு தொடர்பாக கரு த்து வெளியிடுகையிலேயே  இவ் வாறு தெரிவித்துள்ளாா்.

 மேலும் விவரிக்கையில்....,

குறித்த சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் எதிர்க் கட் சித் தலைவர் சம்பந்தன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சித்தார்தன் உட்பட நானும் கலந்துள்ளோம்.

15 வருடங்களிற்கும் மேல் அரசியல் கைதிகள் சிறைகளிலே இருக்கிறார்கள் அவர்கள் விடுதலை செய்யபட வேண்டும் என்று நாங்கள் கோரியிருந்தோம். பாதுகாப்பு கவுன்சிலை அழைத்து அவர்களுடன் கலந்துரையாடி முடிவெடுப்ப தாகவும், பிரதமரோ அமைச்சரவையோ நீதிமன்ற தீர்ப்பின்படி தற்போது இல்லை எனவே அவ் விடயங்களை மீளவும் ஆராய வேண்டியுள்ளது.

எனவே வெகுவிரைவில் மீண்டும் பேசுவதாக ஜனாதிபதி கூறினார். கிளிநோச் சியை சேர்ந்த அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை நீங்கள் நினைத்தால் விடுதலை செய்ய முடியுமென நாம்  ஜனாதிபதியிடம் கோரியிருந்தோம்.

அது தொடர்பாக பரிசீலிப்பதாக தெரிவித்திருந்தார். நீதிமன்ற தீர்ப்பினால் எமது கலந்துரையாடல் நீண்டு செல்லவில்லை. அரசியல் நெருக்கடி தீர்ந்த பின்பு மீண்டும் நாம் குறித்தவிடயம் தொடர்பாக பேசவிருப்பதாக செல்வம் தெரிவித்துள்ளாா்.