விடுதலைச் சிறுத்தைகளை எச்சரிக்கும் வைகோ.! - THAMILKINGDOM விடுதலைச் சிறுத்தைகளை எச்சரிக்கும் வைகோ.! - THAMILKINGDOM
 • Latest News

  விடுதலைச் சிறுத்தைகளை எச்சரிக்கும் வைகோ.!

  நான் ஆபத்தானவன், என்னை உரச நினைத்தால் தீப்பிடிக்கும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை எச்சரித்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

  கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தொலைக்காட்சி நேர்காணலில் கல ந்து கொண்ட மதிமுக பொதுச் செய லாளர் வைகோவிடத்தில், தலித்து கள் ஆட்சி ; அதிகாரத்தினை அடைவ தற்காக அடைவதனை திராவிட இயக்கங்கள் என்ன விதமான செயற் பாடுகளை செய்துள்ளன? என கேள்வி யெழுப்பியுள்ளனா்.

  இதனால் கோபமடைந்த வைகோ, உள்நோக்கத்துடன் கேள்விகளை கேட்டு பழி சுமத்த முயல்கிறீர்கள் என தெரிவித்து அந்த நேர்காணலிலிருந்து இடை யிலேயே வெளியேறிச் சென்றுள்ளாா்.

  இந் நிகழ்வை சுட்டிக்காட்டி, விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு தனது முகநூல் பக்கத்தில் வைகோ குறித்து ஓர் இடுகையை பதிவிட்டிருந்தார். இதன் காரணமாக ஆவேசமடைந்த வைகோ, "நான் சாதிகளுக்கு அப்பாற் பட்டவன்.

  என்னை இழிவு படுத்துகிறவர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். நான் ஆபத்தானவன். உரசினால் தீப்பிடிக்கும் என ஆவேசமாக பேசினார். மேலும், "பல்வேறு தேர்தல் சமயங்களில் விசிக தலைவர் திருமாவளவனுக்கு பணம் கொடுத்து உதவியவன் நான். என்னிடத்தில் மோதாதீர்கள்" என எச்சரிக்கைத் தொனியில் தெரிவித்துள்ளாா்.


  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: விடுதலைச் சிறுத்தைகளை எச்சரிக்கும் வைகோ.! Rating: 5 Reviewed By: tamil2017
  Scroll to Top