கருணாவை உடனடியாகக் கைது செய்யுமாறு எச்சரிக்கை.! - THAMILKINGDOM கருணாவை உடனடியாகக் கைது செய்யுமாறு எச்சரிக்கை.! - THAMILKINGDOM
 • Latest News

  கருணாவை உடனடியாகக் கைது செய்யுமாறு எச்சரிக்கை.!

  விடுதலைப் புலிகளை மீண்டும் இலங்கையில் உருவாக்க முற்படும் வகை யில் நடந்து கொள்ளும் விநாயகமூர்த்தி முரளிதரனை உடனடியாக கைது செய்யவேண்டுமென, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி வலியுறுத்தியுள்ளார்.

  நாடாளுமன்றத்தில் இன்று முற்பகல் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

  நாடாளுமன்றில் தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், அண்மையில் மட் டக்களப்பில் இரண்டு பொலிஸார் படு கொலை செய்யப்பட்டுள்ளனா்.

  இதற்கு சில நாட்களுக்கு முன்னதாக விநாயகமூர்த்தி முரளிதரன் டுவிட்ட ரில் எச்சரிக்கை விடுத்திருந்தார். அவ் வாறு அவர் கூறிய நிலையில் இவ்வா றான கொலைச் சம்பவங்கள் நடைபெறுமாக இருந்தால், விநாயகமூர்த்தி முரளிதரனையும் கைதுசெய்ய வேண்டும்.

  மற்றும் ஸ்ரீமா போதி, தலதா மாளிகை உள்ளிட்ட வணக்கஸ்தலங்கள் மீது குண்டு தாக்குதல் நடத்திய விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு ஸ்ரீலங்கா சுதந்தி ரக் கட்சியில் உப தலைவர் பதவி வழங்கியதுடன், பிள்ளையான் போன்றவர் களை அழைத்து வந்து முதலமைச்சர் பதவி வழங்கியவர்களுக்கு தண்டனை வழங்கப்படவில்லை.

  இவ் விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்க வேண் டும். மீண்டும் இந்த நாட்டில் விடுதலைப்புலிகளை உருவாக்குவதற்கு முயற் சிக்கும் விநாயகமூர்த்தி முரளிதன் போன்றவர்களுக்கு எதிராக ஜனாதிபதி என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றார் எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

  இதேவேளை, நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலை நிறுவத்துவதாக தெரிவித்த ஜனாதிபதி, நாடாளுமன்றத்துக்குள் மோசமான முறையில் நடந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

  இவ்வாறான செயற்பாடுகளை வன்மையாக கண்டித்து உரையாற்றுகையில், நாடாளுமன்றத்தில் வைத்து பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலை யில் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

  வீதியில் யாராவது பொலிசாருக்கு இடையுறு ஏற்படுத்தினால் கைதுசெய்து 14 நாட்கள் சிறையில் தடுத்து வைப்பார்கள். சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச் சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளார். அவர் தனக்கு இரண்டு மணித்தியாலங்கள் வழங்கப்பட்டால் நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கினை நிலை நிறுத்துவதாக தெரிவித்துள்ளாா்.

  இலஞ்ச - ஊழல் விடயம் தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லையெனத் தெரிவித்தாலும் கண்முன்னே நாடாளு மன்றத்தில் நடைபெற்ற விடயம் தொடர்பில் இவர்கள் எந்தவொரு நடவடிக் கையும் எடுக்கவில்லை. இவ்வாறு தான் அனைத்து விடயங்களிலும் அவர்கள் செயற்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளாா்.


  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: கருணாவை உடனடியாகக் கைது செய்யுமாறு எச்சரிக்கை.! Rating: 5 Reviewed By: tamil2017
  Scroll to Top